பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோற்றோடு வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்பப் பொக்கை வாய்தனைத் திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவி யொருத்தி; ஓடிவந்தான் ஒரு வீரன். 'ஒருசேதி பாட்டி' என்றான் 6 6 ஆடி வந்த சிறுமிபோல் பெரு மூச்சு வாங்குகின்றாய் ஆண் மகனா நீ தம்பி ? மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்-பின் பேச்சுக்குத் துவக்கம் செய்!" என்றாள் அந்தக் கிண்டலுக்குப் பேர்போன கிழட்டுத் தமிழச்சி. 66 'வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி, உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு. மடிந்தான் உன் மகன் களத்தில் என்றான், மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை. 6 6 'தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு. களமும் அதுதான் ; காயம் மார்பிலா? முதுகிலா? கழறுவாய் 99 66 முதுகில் என்றான். - "என்றாள். கிழவி துடித்தனள், இதயம் வெடித்தனள், வாளை எடுத்தனள், முழவு ஒலித்த திக்கை நோக்கி முடுக்கினாள் வேகம் ! 8 6 கோழைக்குப் பால் கொடுத்தேன்- குப்புற வீழ்ந்து கிடக்கும் மோழைக்குப் பெயர் போர்வீரனாம்! முன்பொரு நாள் பாய்ந்துவந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைக் காட்டிச் சாய்ந்து கிடந்தார், என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா! அடடா! மானமெங்கே! குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்துபட்டான் மய வரம்பினிலே வீரம் சிரிக்கும் ; இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்; அதுவும் மானம் மானமென்றே முழக்கும்! மதுவும் சுராவும் உண்டு வாழும் ? மானமற்ற வம்சமா நீ ? ஏடா?