பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தனக்கிண்ணம் மறத்தமிழ்க் குடியிலே மாசு தூவி விட்டாய்! மார்பு கொடுத்தேன்; மகனாய் வளர்த்தேன், தின்று கொழுத்துத் திமிர் பாய்ந்த தோள்கள் எங்கே? தினவெடுக்க வில்லையோ? அந்தோ! வேலுக்கு வழிசொல்ல வகையற்ற கோழையே! என் வீரப் பாலுக்கு வழிசொல்வாய்!” என்று கதறினாள், எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி. சென்றங்கு செருமுனையில் சிதறிக் கிடந்த செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள். அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று இரத்த வெள்ளம்! பிணக் குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள். மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை ; மகன் பிறந்தபோதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு. அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி ! இதைக் கண்டாள்-இதயங் குளிர்ந்தாள் ; 66 எதைக் கண்டாலும் இனிக் கவலையில்லை; என் மகன் வீரனாய் இறந்தான்!" என்றாள், 66 “அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை ; அட்டா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவன் எங்கே? வாளிங்கே! அவன் நாக்கெங்கே ?" 66 41 இந்த வீர இசையைத் தலைவர் முடித்தார். பந்தல் அதிர்ந்தது, கைதட்டலால்! கையொலி ஓய்ந்த பிறகு தலைவர் சொன்னார்: இந்தப் பாட்டு நான் எழுதியதில்லை. இதோ இருக்கிறாரே ; இந்த மணமகன் எழுதியது! என்று உற்சாகத்தோடு உரைத் தார். மீண்டும் பந்தல் அதிர்ந்தது! பக்கத்திலிருந்த புதுப்புறாவின் இளங்கன்னங்கள் ரோஜாவாயின. இதயம் எப்படி மலர்ந்ததோ யாரறிய முடியும்? தலைவர் வாழ்த்துரையை முடித்தார். பரிசுகள் வழங்கும் படலம் ஆரம்பமாயிற்று. மணமகளின் உள்ளத்தை அருகிருந்த மணமகனை விட அதிகமாக உணரக்கூடிய சக்திவாய்ந்த ஓர் உருவம் அந்தப் பந்தலிலே அமர்ந்திருந்தது. அதுதான் மணமகளின் தோழி விஜயா. கமலாவும் விஜயாவும் கல்லூரியில் மட்டுமல்ல ; இளமையிலேயே இணைபிரியாதவர்கள். விஜயா இல்வாழ்க்கைப் பாதையிலே பயணம் நடத்திக் கொண்டிருப்பவள். கமலா இன்றுதான் அடியெடுத்து வைக்கிறாள், கந்தனின் கை கோத்தபடி. அறிஞர்களின்