பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் பாராட்டுக்குரிய ஓர் அன்புத் துணை தன் தோழிக்குக் கிடைத்தது கண்டு விஜயாவுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி! அந்த ஆனந்தத்தில் மெய்ம்மறந்திருந்தாள். கணவன் கணவன் மணமேடையில் புகழப்படும் போதெல்லாம் கமலா, விஜயாவைக் கெண்டைக் கண்ணால் பார்த்ததை விஜயா மட்டுமே உணரமுடிந்தது. பரிசளிப்புகள் முடியுந் தறுவாயிலிருந்தன. இன்ப வெள்ளத்தில் எல்லாவற்றையும் மறந்திருந்த விஜயா திடுக்கிட்டு எழுந்தாள். பரபரப்புடன் மணமேடைக்கு ஓடினாள். தன் கையிலேயிருந்த ஒரு தாள் சுருளைப் பிரித்தாள். 66 கண்ணே, கமலா...! நீ அதிர்ஷ்டசாலி இதைப் பெற்றுக்கொள், நம் அன்பின் அடையாளமாக! எந்த நெருக்கடி வந்தாலும் சரி, இந்த அன்புச் சின்னத்தை மறந்து விடாதே! சந்தனக் கிண்ணம் -உன்உள்ளம் சந்தோஷக் கிண்ணமாயிருப்பதை விளக்கும் சின்னம்! " த ம் என்று கூறிக்கொண்டே கமலாவைத் தழுவிக்கொண்டாள். ஆனந்தக் கண்ணீர் பொழிந்தாள். கமலாவும் கண்கலங்கிவிட்டாள் சந்தோஷத்தால். வாழ்வின் ஆரம்பவிழா அரும்பிவிட்டது. குடும்பம் குதூகலமாய்த் துவங்கியது. கமலா கொஞ்சம் பழைமைப்பித்துப் பிடித்தவள். காதலர்களுக்குள் ஊடல் ஏற்படுவதெல்லாம் பழைமை-புதுமைச் சண்டையினாலேயே என்ற நிலைமை சிலநாள் தொடர்ந்தது. பிறகு இருவருமே கடவுளர்களைக் கேலி செய்ய ஆரம்பித்தனர். 6 6 யறைக்குப் பரமசிவனையும் பார்வதியையும் தினம் தினம் பள்ளி பல்லக்கில் தூக்கிக்கொண்டு போகிறார்களே பக்தர்கள்...! ஆனால் அவர்களுக்குக் கணபதி, முருகன் இருவரைத் தவிர வேறு குழந்தைகள் பிறக்கவே இல்லையே ! ஏன்?" என்பான் கந்தன். தெரியாதா உங்களுக்கு ? அவர்கள் கர்ப்பத்தடை செய்து கொண்டார்கள்!" என்று சிரிப்பாள் கமலா. "கடலிலே மீனை வெள்ளைக்காரனும் பார்த்தான்; நாமும் என்று ஆரம்பிப்பான் கந்தன். பாத்தோம்...