பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G சந்தனக்கிண்ணம் 45 கையிலே கொடியேந்தியவாறு ஆவேசமுடன் அந்தப் பட்டாளத் தில் பவனி வந்தான். கமலா கூட்டத்துக்குள் ஓடினாள். கந்தனைப் பிடித்து நிறுத்தினாள். கந்தனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஐயோ, கூட்டத்திலேயுள்ள கொள்கை வீரர்கள் தன்னைப்பற்றித் தவறாக நினைக்கக் கமலா இடமளித்துவிடுவாளோ என்று கலங்கினான். கமலா ஆத்திரத்தோடு கேட்டாள்! 66 இந்தி எதிர்ப்புக்கு உங்களை யார் போகச்சொன்னது? இதைக் கேட்டுக் கந்தன் விழித்தான். ஆனால், கமலா வார்த்தையை முடிக்கவில்லை இப்போதுதான் முடித்தாள்; 66 என்னை விட்டுவிட்டு?” என்று! இந்தி எதிர்ப்புக்கு உங்களை யார் போகச் சொன்னது, என்னை விட்டுவிட்டு!” என்ற மொழி கேட்டதும் மூதாட்டி ஓடிவந்து கமலாவை அணைத்துக்கொண்டாள். மீண்டும் தமிழ் முழக்கம் தொடர்ந்தது. ஊர்வலம் அந்த வீதியைத் தாண்டியது. போலீசார் பாய்ந்தனர், புள்ளிமான் கூட்டத்திலே புலியென ! வேட்டுச் சப்தம், வேதனை ஒலி. 'தமிழ் வாழ்க!' என்ற போர் முரசம். அத்தனைப் பேரையும் சிறைச்சாலைக்கு வாருங்கள் என வரவேற்றது அதிகாரத் திமிர்! 86 66 “ கணவனுக்கும் கமலாவும் கந்தனும் சிறைச்சாலையிலே, மனைவிக்கும் திராவிடமே மூச்சு!" என்பதை மோகனத்திலே முணுமுணுத்துக்கொண்டிருந்தனர். அடக்குமுறை தர்பார் துவண்டது. இந்தி வெறியர்கள் இனிப் பலிக்காது நம் முயற்சி ' என என மிரண்டனர். கட்டாய இந்தி, கடையைக் கட்டியது! தமிழர் படை வென்றது. வீரர் உலாப் பாடினர்; கட்டாய இந்தி, கழுதை தேய்ந்து கட்டெறும் பாயிற்று ! வென்றது மொழிப்போர்! ! 66 கமலாவும் கந்தனும் தமிழ் காத்த தடந் தோள்களிலே வெற்றிமாலை சூடி, வீட்டுக்குத் திரும்பினர். வீண் வேலையில் ஈடுபட்டாய், இனி வேலை கிடையாது உனக்கு!” என்ற ஆபீஸ் உத்தரவும் அவனுக்கு முன் வீட்டுக்கு வந்திருந்தது. தாயாரோ, புகையும் எரிமலையாக இருந்தாள். 66 அம்மா, உனக்கு ஒரு கேடு என்றால் துள்ளியெழ மாட்டே னா நான்? அது போலத்தான் தாயே, தாய் மொழியைப் பழித்தவரை எதிர்த்தேன் ; இது குற்றமா அம்மா?” என்று