பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிலிச்சாமி 53 முதலியார் ஒரு கிண்ணம் பாலைச் சாமியிடம் நீட்டினார். அதைச் சிஷ்யன் சம்பந்தம் வாங்கிச் சாமியின் உதட்டில் வைத்தான்... மறுநாட் காலையில் வழக்கம்போல் பூசையெல்லாம் முடிந்து... வெள்ளிக் கட்டிகளும் வந்து சேர்ந்தன. சாமியார் அந்த வெள்ளிப் பாளங்களைக் கண் குளிரப் பார்த்து "மூடாத்மா ஞானாத்மாவாக மாறுவது போல் - நாஸ்திகன் ஆஸ்திகனாய் மாறுவது போல் ' வெள்ளியே! நீ தங்கமாகப் போகிறாய்!" 6 . இதைச் சாமியார் சொல்லும் பொழுதுசம்பந்தம் தலையாட முதலியார் முகமும் அகமும் மலர்ந்த காட்சி வெகு ரம்மியமா யிருந்தது. சாமியார் பூஜை செய்ய உட்கார்ந்தார். சாம்பிராணிப் புகைச்சல், ஊதுவத்திகளின் மணம். அரைத்த சந்தனத் தின் வாடை மல்லிகை மாலைகள் தந்த குளிர்ந்த வாசனை .... 66 . மாடியில் ஒரு சொர்க்கலோகத்தையே சாமி உண்டாக்கி " என்றார் முதலியார். விட்டது 99 "சொர்க்கலோகம் இருந்தால்தானே சொக்கநா தன் வருவான்" என்றான் சம்பந்தம். ஒரே கனவு. தங்கமாக முதலியாருக்கு இரவெல்லாம் மாறிய வெள்ளிக் கட்டிகளின் பிரகாசம், அந்தத் தங்கக் கட்டிகளை உடைத்து வெளியூர் சென்று வியாபாரம் செய்வது, நல்ல விலைக்கு விற்ற பிறகு....பெரிய குபேரனாவது, குபேரன் ஆனதும் உள்ளூர்ப் உள்ளூர்ப் பெரிய பண்ணையை ஏளனம் செய்வது, இந்தக்கனவுகளில் புரண்டுகொண்டிருந்தார். தங்கத்தை வியா பாரம் செய்யப்போன இடத்தில் போலீஸ்காரர் கையில் சிக்கி விட்டதாக ஒரு பயங்கரக்கனவால்.. பண்ணையார் பதறியடித்து எழுந்தார். கண்களை நம்பமுடியாமல் கசக்கிக்கொண்டார். பொழுது விடிந்தது. தங்கத்தைப் பார்ப்பதற்காக சம்பந்தத்தை யும் அழைத்துக்கொண்டு மேல் மாடிக்கு ஓடினார். • • சாம்பிராணி வாடை நிரந்தரமாகப் பரவி.. .முதலியாருக்கு உற்சாகமான வரவேற்புக் கொடுத்தபடி இருந்தது. மாடியில் நுழைந்த முதலியார் சாமி... சாமி.. என்று கத்தினார். அவ்வளவுதான் ; மூர்ச்சையாகி விட்டார். '