பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கையின் காதல் 61 தாள். அவள் நீலக் கருவிழிகளைக் கிளைகளின் நடுவே நீண்ட ரண்டு கரங்கள் பொத்தின. கங்கையின் கைகள் அவளையறியாமல் அந்தக் கைகளைப் பிடித்துக்கொண்டன. அல்லித் தண்டில் ரோஜா மலரைப் பொருத்தி வைத்தது போலிருந்தது அந்தக் கைகலப்பு. "சந்திரா!" தேனுண்ட மயக்கத்தில் களைப்புற்ற வண்டின் கீழ்ஸ்தாயி ரீங்காரம் போலிருந்தது அந்த அழைப்பு. சந்திரா....ஆம், சந்திரன்தான். சிவனாரின் தலையில் குடி யிருக்கும் அந்த வாலிபன் தான். பஞ்சோடு நெருப்பை வைத்திட லாகாது என்பார்கள். முருகனின் மயிலோடு.. பாம்பை வைத் திருப்பவர் தானே பரமேஸ்வரன். கங்கையைத் தலையில் கொண் டவர் சந்திரனைக் காலிலாவது வைத்திருக்கலாம் ; 'பாவம்' அவர் தலை எழுத்து ! “கங்கா! கண்ணே !” ரா!.... சல்லாப ரூபா !” “சந்திரா!.. "அன்பே!....நேற்று ஏண்டி வரவில்லை?" என்னவோ "நேற்று என் முறை; இன்று பார்வதி முறை.' "மெதுவாகப் பேசு.... சிவன் விழித்துவிடப்போகிறார்." 'நல்லவேளை.... தலையில் கண்ணில்லை; விழித்தாலும் பய மில்லை. 66 66 66 நீ கிண்டல்காரி கங்காய்!” நீ மட்டும் என்னவாம்!” கங்கா....! உனக்கு அந்தக் கிழவனோடு பேசப்பிடிக் கிறதா?" 66 66 பிடித்திருந்தால்..சந்திரனை ஏன் தேடுகிறேன்?' 'தாரை பேசுகிற மெட்டில் பேசுகிறாயே.. அவளும் இப்படித்தான்; அவள் புருஷன் தாடியும் மீசையுமாய்த் தள்ளாத காலத்தில் அவளைக் கஷ்டப்படுத்துகிறானாம்." 66 எங்களைப்போலத் தாரையும் கங்கையும் தள்ளாத கிழவன் களுக்கு வந்து சேர்ந்தால், உன்னைப்போலச் சந்திரர்களுக்கு வேட்டைதான்."