பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 67 66 66 விடியற்காலை-திட்டம்-மறந்து விடாதீர்!” ' விருந்து-அதையும் நீ மறந்து விடாதே ! ' சுழற்கண்ணி, அவன் பேச்சை ஆமோதிப்பதுபோலத் தலை யசைத்துக்கொண்டு புன்னகை சிந்தினாள். தீட்சண்யனோ அந்தச் சிரிப்பை ரசித்தவாறு அந்த இடத்திலிருந்து நகர்ந்தான். தடித்த உதடுகளை அழுத்தமான நாவினால் தடவியபடி ஏதோ ஓர் இன்பச் அனுபவித்தவாறு அந்த முரடன் சுழற்கண்ணியின் சுவையை பார்வையிலிருந்து மறைவதற்கும்- 66 சுந்தரீ ` 99 என்றவாறு சுவைக் காவியம் படிப்பதற்கு அரசன் வருவதற்கும் சரியாக இருந்தது. மன்னன் வந்தான். தீட்சண்யனிடத்திலே அவள் கூறியவை அனைத்தும் உண்மையே என்பதை நிரூபிப்பது போல் அவள் மடியில் சாய்ந்தான்-பிடியில் சிக்கினான். சுழற்கண்ணி சுந்தரபுரி மன்னனின் இளைய ராணி, அவளுக்கு மைத்துனன் தீட்சண்யன். தூரத்து உறவு. அரண் மனையிலே அவனுக்கு மெய்க்காப்பாளன் வேலை. அரசனது மெய் காக்கவும்-ஓய்வு கிடைத்து, நேரம் வாய்க்கும்போது சுழற் கண்ணியின் மெய் தழுவிக் கிடக்கவும்-ஆகிய இரண்டு வேலை களும் மாறிமாறி வந்து கொண்டிருந்தன அவனுக்கு ! கனிரசம் பருகக் கசக்குமா? அதிலும் அவன் கரடித் திருமேனியன் ! தேன் கூடு போலச் சுழற்கண்ணி, வலிய வலிய வருகிறாள். கொம்பு வளைந்து தேனைக் கொட்டிக் கரடிக்குப் பசி தீர்ப்பது போலக் கற்பனை கூடச் செய்ய முடியாது. சுந்தரபுரி அரண்மனையிலோ இது நித்திய நிகழ்ச்சியாக இருந்தது. பாறாங்கல்லை ஒத்த கரடு முரடான அவனது மார்பகத்தில் பச்சைக்கிளி போன்றவள் தொத்திக் கிடந்தாள். 66 66 அவனோ, என் இச்சைக்கினியவளே ! இனிப்பு தரும் இன்னமுதே ! " எனப் பாழ்த்த குரலெடுத்துப் பாடிக் கொண் டிருந்தான். திரைமறைவில் நடக்கும் இந்த அவமானகரமான அநியாயத்தின் அடையாளமும் தெரியாமல் அரசருக்கரசன் அவளை நோக்கி,  ! உத்தமியே! உயர்ந்தவளே ! உல்லாசி ! ஊர்வசி!" எனப் புகழாரம் தொடுத்துக் கொண்டிருந்தான். சுந்தரபுரி சாம்ராஜயத்தைச் சுடுகாடாக்க வந்த 'வசந்த சேனை' சுழற்கண்ணியின் உருவத்திலே உலவுகிறாள் என்பது அந்த ராஜ ரசிகனுக்குப் புரியாமல்தான் போய்விட்டது!