பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 69 66 இந்தச் சதியில் ஜெயம் நமக்கே !” என்று ஒருவரை யொருவர் தழுவியபடி உரக்கக் கூவி மகிழ்ந்தனர்-ஊர் கெடுக்க வந்த ஜாலக்காரர்கள். திட்டத்தின் முதற் கட்டம் மிகத் தீவிரமாக அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. 66 பேசி திடீரெனச் சுழற்கண்ணி இளவரசன் இன்பசாகரன் மீது அன்பு மழை பொழிய ஆரம்பித்தாள். அக்காளுக்கும் என்னைப்போலத்தானே ஆசையிருக்கும். அவளோடும் மகிழ்ந்து, கூடிக் குலவியிருப்பதுதானே தங்களைப்போன்ற தர்மம் தவறாதவர்களுக்குத் தகுதியான காரியம்!” என்று உபதேசம் செய்ய ஆரம்பித்தாள் மன்னனிடம் ! தேவீ! நான் எப்படியோ விதியின் மாயையால் உங்கள் வாழ்வில் குறுக்கிட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இனி நான் எங்கே போவேன்? தங்கள் தங்கையாக என்னைக் கருதி எனக்கு வாழ்வு அளியுங்கள் என்று கோப்பெருந் தேவியின் பாதங்களில் கண்ணீரைச் சொரிந்தாள். 99 மன்னன் - மகாராணி-இளவரசன் அனைவருமே அவளது மாய்மாலத்தில் மயங்கினர். 66 அரண்மனையில் புதிய இன்பம் ! சந்தோஷமான திருப்பம்! அரசரும் அரசியும் ஒற்றுமைப்பட்டு விட்டனர். சுழற்கண்ணி, தன் தவறுகளை உணர்ந்து திருந்தி விட்டாள். அப்பப்பா ! ளையராணி இப்போது இன்பசாகரனை எப்படிக் கவனிக்கிறாள் தெரியுமா! பெற்ற தாய்கூட இவ்வளவு அன்பு காட்ட முடியாது! என்று சுந்தரபுரி முழுதும் குரல் கிளம்பியது. ளவரசன் இப்பொழுதெல்லாம் தாயிடம் கூட அவ்வளவு அதிகமாகத் தங்குவதில்லை. இளைய ராணியின் மாளிகையிலே விளையாடிக் கிடக்கிறான். அவள் கையால்தான் அவனுக்கு உணவு தரவேண்டும். அவள் சொன்னால்தான் எதையும் கேட்பான். இது கண்டு அரண்மனையே அதிசயித்தது. அரச ரும் சுழற்கண்ணியின் மீது புதிய பாசம் கொண்டார். அரசியும் அவளைத் தன் அருமைத் தங்கைபோல நடத்தினாள். தங்கையின் நெஞ்சிலே புகையும் நெருப்பை அவள் எங்கே கண்டாள்? ஒருநாள் சுழற்கண்ணியின் மாளிகையில் இன்பசாகரன் குழல் வாத்தியக் கருவியுடன் நுழைந்தான். தெரியாதவள்போல