பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் சின்னம்மா கற்றுத்தந்த பண்ணை விடாமல் இருந்தது. ஊதிக்கொண்டே இன்னும் சிறிது நாழிகையில் மயில்கள் எல்லாம் வந்து தன் முன்னே ஆடப்போகின் றன என்ற நினைவோடு, இன்னும் இன்னும் அதிக உற்சாகத்தோடு குழல் ஒலி புறப்பட்டது! உ நகர்ந்து வந்த நாகம், படமெடுத்தபடி பாலகனின் எதிரே மயங்கி நின்றது. அதைப் பார்க்காத இளவரசன் குழலூதும் கவனத்தில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். கண்களை மூடிக்கொண்டே குழல் ஊதுவது-திடீரெனத் திறந்து பார்த்தால் எதிரே மயில்கள் ஆடும்-அதைப் பார்த்து மகிழ்வது ! இப்படி ஓர் இன்பக் கனவோடு அவன் இசை முழக்கம் செய்து கொண்டிருந்தான். அவன் என்ன கண்டான் -திரே உயிர் வாங்கும் பாம்பு பல்லிலே விஷம் தேக்கியபடி ஆடிக் கொண்டிருக்கிறது என்பதை! மயங்கி நிற்கிறது நாகம்! மயக்கம் தெளிந்தால் இளவரசன் அதற்கு இரையாவான்! இசை விடும் ! நின்றால், உடனே பாம்பின் மயக்கமும் தெளிந்து என்ன நடக்கப்போகிறது என்பதை உப்பரிகையில் இருந்த படியே இளையவள் பார்த்துக் கொண்டிருந்தாள். புதரின் மறைவில் இருந்தபடியே தீட்சண்யன் புன்னகை சிந்திக் கொண்டிருந்தான். அந்தக் கொடுமையைக் காண்பதற்குக் கோப்பெருந்தேவியும் அங்கு வந்து சேர்ந்தாள். கீதம் அவளைக் கவர்ந்தது. எங்கிருந்து வருகிறது எனக் கவனித்தாள். இன்பநாதம் எழுப்புவது தன் மகன் எனக் கண்டாள். மகிழ்ந்தாள். அடுத்த கணம் மகிழ்ச்சி மறைந்தது. சுந்தரபுரியின் எதிர்கால மன்னன்- அவனெ திரே சாவின் நர்த்தனம்! வயிற்றிலே கிடந்த வைடூரியம்! அதை விஷத்தால் குளிப் பாட்டி வேகவைக்க எதிரே மரணத்தின் மயக்கம் நிறைந்த சதிராட்டம் ! 68 அய்யய்யோ என்ன செய்வேன்! ' என நிமிர்ந்தாள். இளையவள் - தீட்சண்யன் இருவரும் இருப்பதை உணர்ந்தாள்.