பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 73 அவர்களை பார்க்காதவள் போல் பாலகன் பின்னே வந்தாள். அவளுக்குப் புரிந்து விட்டது-சதி பற்றிய விளக்கம். குழலோசை நின்றால், பின் குமரனைப் பாம்பு தீண்டிவிடும் என்பதையும் தெரிந்து கொண்டாள். அவளது தாய் உள்ளம் தணலிலிட்ட புழுவாயிற்று. எந்தத் தாய்க்குத்தான் சகிக்கும்! தான் பெற்ற தங்க விக்ரகத்தின் மேனியெங்கும் நீலம் பாய்ந்து, அலங்கோலமாக விழப்போவதை எந்த அன்னைக்குத்தான் தாங்கிக் கொள்ள முடியும்! ன்பசாகரா ! ' 66 என்று சப்தம் போட்டால் அவன் திடீரெனக் குழல் வாசிப்பதை நிறுத்தி விடுவான்-உடனே நாகம் தன் வேலையை முடித்து விடும். என் செய்வாள் தாய்? கத்தினாள். எப்படி? இன்ப சாகரா !...வாத்தியத்தை நிறுத் தாதே! நிறுத்தாதே! ஊதிக்கொண்டேயிரு !” என்று அலறி னாள். தாயின் குரல் அந்த இளவலின் காதிலே ஒலித்தது. கண்ணைத் திறந்தான். எதிரே பாம்பு! நடுக்கம் தாங்க முடிய வில்லை. எழ முடியாதபடி ஆகி விட்டான்! தாயோ தொடர்ந்து சப்தமிட்டுக் கொண்டேயிருந்தாள்: நிறுத்தாதே ! ஊது !! ஊது ! என்று. 66 99 அவனும் ஊதிக் கொண்டே யிருந்தான், ஏன் எதற்கு என்று புரியாத நிலைமையில்! 6 6 ஊது! ஊது!! என்று அவனருகே வந்து கொண்டிருந்தாள். கூறிக்கொண்டே தாய் குழலோசை உச்சக் கட்டத்தை அடைந்தது. நாகமும் இன்னும் மேலே உயர்ந்து படந்தூக்கி ஆடியது. 6 6 நிறுத்தாதே ! ஊது ! ஊது!'-தொடர்ந்து அலறல் ! அதையொட்டி “ஆ!” என்ற சப்தம் ! ஆம்; கோப்பெருந்தேவி, தடா'ரென்று அந்தப் பாம்பின் முன்னே விழுந்தாள். படமெடுத்திருந்த பாம்பு அவள் மீது பாய்ந்தது-அவள் உடலில் விஷம் பரவியது. இனியென்ன? பாம்பு ஓடியது. ஓடுகிற பாம்பை வாளால் வீசிக் கொன்று விட்டு அங்கு ஓடிவந்து விழுந்தான் மன்னவன்.