பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் இறந்துவிட்டார் !... இல்லை..... இல்லை ; கொலை செய்யப்பட்டார்! கொலை செய்தவன் ஒரு மில் தொழிலாளி; பெயர் விட்டல். அன்றிரவே கொலைகாரனைப் பிடித்துக் கூட்டில் அடைப்பதற் காகப் போலீசார் லாரிகளிலும், கார்களிலும், சைக்கிள்களிலும் புயல் வேகத்தில் முயன்று கொண்டிருந்தார்கள். ராமதுரை என்றால் யார்?- காலையிலெழுந்து, கடவுளே' என் ' என்று கூப்பிட்டு ஒருமுறை தலைவிதியை நொந்துகொண்டு வயிற்றுப்பாட்டைப் பார்க்கும் ஓர் ஏழை மனிதரா? ஏழை கொல்லப்படுவது ஓர் எறும்பு நசுக்கப்படுவது போல ! ராமதுரை போன்ற பணக்கார ருக்குச் சாவு வரலாமா? வாழ வசதியும், வளமும், வற்றாத இன்பமும் அளித்திருக்கிற கடவுள், ஆயுளையும் ஆயிரமாக அதிகப் படுத்தக்கூடாதா என்ற கவலை அவர்களுக்கு வளர்பிறையாகுமே ! ஐயோ பாவமே ! ராமதுரைக்கு நாற்பது வயதுகூட இருக்காதே ! நல்லவராயிற்றே! நாடு புகழ் வள்ளலாயிற்றே ! நாகேஸ்வரன் கோயில் நவராத்திரி அவர் உபயந்தானே ! அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் ஆயிரக்கால் மண்டபம் கட்டியது அந்தப் புண்ணியவான் தானே ! ஒரு தர்ம தாதாவைப் பாவிப் பயல் குத்திக் குவித்து விட்டானே !" 66 66 அப்படித்தான் என்ன, அவர் துன்பம் அளித்தாரா? ஒரு ❝ தொழிலாளர்கட்கு ஸ்ட்ரைக்' உண்டா அவருடைய மில்லில்? ஒரு தொழிலாளியை வேலையை விட்டு நீக்கினார் என்றுதான் இருக்குமா? ஒன்றுமே இல்லாமல், இவன் இழவுக்கு இருநூறு ரூபாய் கடன் கொடுக்க மறுத்தார் என்பதற்காக இப்படி ஒரு மகாபாதகம் மகாபாதகம் செய்வதா? பாவி, அவன் நல்லா யிருப்பானா?" 66 ‘அந்தக் குபேரனுடைய மனைவி -மகாலட்சுமி மாதிரி; ரண்டு மழலைக் குழந்தைகள். அவர்களுடைய மனம் என்ன பாடு படும்? ஏழேழு ஜன்மங்களுக்குத் தவமிருந்தாலும் கிடைக்க முடியாத கணவனைப் பிரிந்து அவள் எப்படித்தான் துடிக் கிறாளோ? அடப் பழிகாரா, பஞ்சமா பாதகா, உன்னை இப்படிக் குத்திக் கொன்றால் உன் மனைவிக்கு வயிறு எரியாதா ? உம்... உன்னையும் கொல்லாமலா விடப் போகிறார்கள்?* தூக்கிலே போடக்கூடாது அந்தச் சண்டாளனை ! துண்டு அவன் சதையைக் கழித்துக் கழித்துக் கொல்ல துண்டாய் வேண்டும்!"