பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பிவிட்டார்கள் 77 இப்படி ஊரின் பல பகுதிகளில் பேச்சுக்கள். கொலைக்குக் காரணம்-விட்டலுக்கு இருநூறு ரூபாய் தரவில்லை. ஆகவே கொன்றான் என்பதுதான். லீலா பட்ட நூலை மில் -- நகரத்தின் ஓர் அழகான பகுதியில் அமைக்கப் பெரிய தொழிற்சாலை. அங்கே சுமார் மூவாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்தனர். பஞ்சை நூலாக்குவதும், நூதன ஆடைகளாக்குவதும் அந்த மில்லின் வேலை. தொழிலாளர்கள் வசிப்பதற்கென்று நகரையடுத்துச் சிறிது தொலைவில் லீலாபுரம் என்ற ற இடமுண்டு. அங்குதான் மூவாயிரம் தொழிலாளிகளும் வாழ்க்கைத் தோணியை நகர்த்திக் கொண்டிருந்தனர். அந்த மூவாயிரத்தில் ஒருவன் தான் விட்டல். அன்று மாலை ஐந்து மணிக்கு வழக்கம்போல் ஆலையின் சங்கு திற்று. அடைபட்டுக் கிடந்த பாட்டாளிக் கூட்டம் அணி அணியாக வெளியேறிப் பெருமூச்சு விட்டபடி வீடு நோக்கிச் சென்றது. அவர்களோடு வெளியேறிய விட்டலும் மில்லுக்கு எதிரேயுள்ள மரத்தடியில் நின்றுகொண்டு பெண்கள் போகும் வழியைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தான். சுமார் ஆயிரம் பெண்களை வெளியே அனுப்பும் வாயில் அது. எல்லாப் பெண்களும் வெளியேறி விட்டனர். அவளை மட்டும் காணவில்லை. ஆம், அவன் மனைவியைத்தான்! அவன் கால்களும் ஓய்ந்து விட்டன. 6 டு . முன்னே போய்விட்டாளோ என்று அங்கிருந்து அவன் வேக மாக நடந்தான். வீட்டுக்கு ஓடினான் வீடு பூட்டியிருந்தது. மீண்டும் திரும்பினான். காலையில் மில்லுக்குப் போகும்போதே தலையை வலிக்கிறது என்றாளே-ஒருவேளை காய்ச்சல் வந்து விட்டதோ?' என்ற சந்தேகம் அவனுக்கு. மனைவியின் மேல் ஓர் எறும்பு கடிக்கக்கூடப் பொறுக்கமாட்டான் விட்டல். அவ்வளவு ஆசை! ஏழைக்கு, அதைத் தவிரத்தான் வேறென்ன இன்பம் ? விட்டல், மில்லை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தான். ற ஆலைச் சங்கு ஊதியதும், அத்தானைக் காண வேண்டுமென்று ஆவல் ததும்பப் புறப்பட்டாள் தங்கம். பகலெல்லாம் மில்லில், பஞ்சைப் பதப்படுத்த வேண்டிய பணி அவளுடையது. அவளுடைய கருத்த மேனியும், முகத்தில் அவளுக்கென்றே அமைந்த தனிக் களையும் விட்டலின் பயங்கரக் கவலைகளை