பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ❝ கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் யெல்லாம் எத்தனையோ முறை விரட்டி யிருக்கின்றன. காலை முதல் கஷ்டப்பட்டுக் கை கால் வலியெடுத்து நிற்கும் அவனுக்கு, அவளுடைய தரிசனம்' தான் மருந்தாக இருக்கும். அதைப் போலவே அவளும் அவனைப் பார்த்துக் குளிர்ச்சி பெறுவாள். வேலை முடிந்ததும் தலையில் ஒட்டிக்கொண்டிருக்கிற பஞ்சைத் தட்டக்கூட நேரமிருக்காது. படுவாள் அத்தானைப் பார்க்க. அவசர அவசரமாகப் புறப் அன்றும் அப்படித்தான் தங்கம் வந்துகொண்டிருந்தாள். பியூன் சிங்காரம் பின்னாலேயே ஓடிவந்து, தங்கத்தைப் பார்த்து உன்னை முதலாளி கூப்பிடுகிறார் "என்றான். என்ன காரணம் என்றே புரியாத தங்கம் திடுக்கிட்டாள். 66 61 66 66 முதலாளியின் அறைக்குச் சென்று அடக்க ஒடுக்கமாக ஒதுங்கி நின்றாள். ராமதுரை ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு தங்கம், வேலையெல்லாம் முடிந்ததா?" என்றார். தங்கம் உம்" என்று தலையை அசைத்தாள். ரொம்பத் திறமையாக இருக்கிறாயாம் ; மானேஜர் சொன்னார்." இதற்குப் பதில் கூறவில்லை. ஒரு புன்சிரிப்புத்தான். அந்தப் புன்முறுவலை ராமதுரை உற்றுக் கவனித்தார். இந்த மாதத் திலிருந்து உனக்குச் சம்பளம் அதிகமாக்கச் சொல்லியிருக் கிறேன்.” 66 தங்கம் இப்போதும் பேசவில்லை; கன்னங்கள் மட்டும் குழியாயின. இந்தச் சந்தோஷ சமாசாரத்தை அத்தானிடம் சொல்ல வேண்டுமே என்று துடித்தாள். அங்கு நின்றுகொண்டு, இளித்துக்கொண்டிருந்த சிங்காரத்தைப் பார்த்து, “ஏய் دو று போடா...... காப்பி கொண்டு வாடா என்று அதட்டினார். அவன் ஓடி விட்டான். ராமதுரை சிகரெட் சாம்பலைத் தட்டிக்கொண்டார். சாம்பல் பூக்காதிருக்கும் போதே, அதைப் பல முறை தட்டிக்கொண்டிருந் தார். இன்னொரு சிகரெட்டை எடுத்தார். தீக்குச்சி அணைந்து விட்டது. சே! ஒரே காற்று! ஜன்னல் கதவுகளைச் சாத்தி விட்டு, மீண்டும் தீக்குச்சியைத் தட்டினார். ஆனால் சிகரெட் கொளுத்தப்படவில்லை. அடாடா என்னகாற்று! சனியன்! தங்கம், அந்தக் கதைைவச் சாத்து சாத்து” என்று சொல்லும்போதே ராமதுரையின் குரல் நடுங்கிற்று, குளிரில் நடுங்கும் கிழவனின் குரல்போல். தங்கம் முதலாளியைப் புரிந்துகொண்டாள். 66