பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் வாயிலில் நின்று கொண்டிருந்த கூர்க்கா ஆச்சரியத்தோடு விட்டலைப் பார்த்தான். விட்டல், அவன் இடுப்பைப் பார்த்தான். பளப்பளப்பான கட்டாரி. ஒரே பாய்ச்சலில் அதைப் பிடுங்கிக் கொண்டு, முதலாளியின் அறையை நோக்கி ஓடினான். அவ்வளவு தான் - தங்கத்தை ருசி பார்த்த அந்தச் சுவை மாறுவதற்குள் ராமதுரை பிணமானார். ஓடிவந்தவனை வாயிற் - கூர்க்கா கட்டாரியைத் தன் இடையில் செருகிக் கொண்டு வெளியே காப்பாளன் வழிமறித்துக் கொண்டான். கூர்க்காவின் கத்தி விட்டலின் விலாவில் பாய்ந்தது. விட்டல், கூர்க்காவின் கழுத்தில் கட்டாரியை நுழைத்து, அவனைத் தூக்கி வீசிவிட்டு, விலாவைப் பிடித்தவாறு-‘குபு குபு' வென்று பெருகும் ரத்தத்தை அடைத்துக்கொண்டு தங்கத்திடம் ஓடிவந்தான். தங்கம் தரையில் சுருண்டு கிடந்தாள். அவளை ஒரு கையால் அணைத்துத் தூக்கிக் கொண்டு மில்லுக்கு ஓரமாக நீர் வற்றிப் போயிருந்த ஒரு வாய்க்காலுக்குள் ஒளிந்து கொண்டான். மில்லிலிருந்து அலறின. ஆட்கள் சிதறினர். டெலிபோன்”கள் தங்கம் தன் சேலையைக் கிழித்துச் சுற்றினாள். விட்டலால் நிற்க முடியவில்லை. தள்ளாடினான். அவன் இரத்தமெல்லாம் விலாவில் ஏற்பட்ட ஓட்டை டை வழியாக வெளியேறிக் கொண் டிருந்தது. “அத்தான், என்னையும் கொன்று விடுங்கள்” என்று தேம்பினாள் தங்கம்; "உஸ்..." என்று அவளைத் தட்டிக்கொடுத் தான். அவன் இமைகள் ஈரமாயின. இருவரும் தழுவிக் கொண் டார்கள். தங்களிருவர்களிடையே ஏற்படப்போகும் பெரியதொரு பயங்கரமான நிகழ்ச்சி, அவர்களைப் பைத்தியம்போல ஆட்டி வைத்தது. ஊர் "இந்த வாய்க்காலுக்குள்ளேயே நடந்தால், அடுத்த ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடலாம். எப்படியாவது தப்ப முயல்வோம்" என்று தழுதழுத்த குரலில் கூறினான் விட்டல். தங்கம் கண்ணீர் பொழிந்தாள். இருவரும் நடந்தார்கள்...நடந்தார்கள். நடந்துகொண்டே இருந்தார்கள்... கொலைகாரனை, போலீஸ் வலைபோட்டுத் தேடும் போதெல்லாம் நடந்து கொண்டுதானிருந்தார்கள்.