பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பிவிட்டார்கள் 81 இங்கு-போலீஸ் வீரர்கள் ஊரை ரகளை செய்தார்கள். ஆகாயத்தைத் தவிர மற்ற இடங்களில் பார்த்து விட்டதாகப் பெருமையடித்துக் கொண்டனர். ஊருக்குள் பார்க்காத இட மில்லை. எதிலும் பயனில்லை என்றதும், ஒன்பது மணிக்குப் புறப்படுகின்ற ரயில் வண்டியில் கொலைகாரன் தப்பிவிடலாம் ற யோசனையின் பேரில் எல்லா ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் லாரிகள் பறந்தன-பத்து மைலுக்குட்பட்ட இடங்களுக்கு. கமலாபுரம் ஸ்டேஷனை நோக்கி ஒரு லாரி ஓடிற்று. என் ஆம்! அந்த ஸ்டேஷனை நோக்கித்தான் தங்கமும் விட்டலும் போய்க்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பத்து நிமிடங்கள் பாக்கி, வண்டி வருவதற்கு! அவர்களும் கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்கள். ஆனால் விட்டலால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. விலாவின் வலி அதிகமாகி விட்டது. "ஐயோ ஐயோ” என்று கத்த ஆரம்பித்தான். தங்கத்தின் நெஞ்சு ‘படக் படக்' என்று அடித்துக் கொண்டது அவள் காதில் தட்டுவது போலிருந்தது. ஆலை வேலை முடிந்து ஆனந்த லாகிரியில் மூழ்கி அத்தானுடன் படுத்துறங்கும் தங்கம் எங்கே?...இப்போது மரண மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் இந்த அபாக்கியம் நிறைந்த தங்கம் எங்கே?... “அத்தான்!” என்று கொஞ்சியபடி அவன் கைகளை எடுத்துத் தன் தோளின்மேல் போட்டுப் பிடித்துக் கொண்டே மூச்சைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். கொண்டுபோய்ச் எப்படியும் அவனை ஸ்டேஷனுக்குக் சேர்த்து விடலாம் என்ற அசட்டுத் தைரியம் அவளுக்குப் பிறந்து விட்டது. அந்த ரயில் மட்டும் கிடைத்துவிட்டால் ?...... பிறகு எங்கேயாவது போய், எப்படியாவது தப்பித்து விடலாம் என்ற ஒரே ஆசைதான் அவர்களை விரட்டியடித்தது. விட்டல் திணறித் திணறி மூச்சு விட்டான். தங்கம் ஆவேசங் கொண்டவளாய் நடந்து கொண்டிருந்தாள்..... திடீரென அவள் முகம் மலர்ந்தது. ரயில்வே ஸ்டேஷன் சிவப்பு விளக்கு தெரிந்து விட்டது. இன்னும் சில நிமிஷங்கள் ; வாய்க்காலிலிருந்து மேலே ஏறவேண்டும் ; அவ்வளவுதான்....... சற்று நேரத்திற்கெல்லாம் ரயில் வந்து விடும்; தப்பிவிடலாம். தங்கம் விட்டலைக் கட்டிக் கொண்டு அத்தான்!” என்றாள். அழுகையும் சிரிப்பும் கலந்து சோகத்தை அதிகமாக்கின. கரையில் க6 86