பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 62 ஏறிக்கொண்டு பலங் கொண்ட மட்டும் முயன்று தன் ஆசை அத்தானைத் தூக்கிக் கரை சேர்த்தாள். இதோ ஸ்டேஷன்!” என்று அவனை இறுகப் பிடித்துக்கொண்டாள். அந்தத் தழுவலில் அவன் விலாவின் வலிகூட இருந்த இடம் தெரியவில்லை. "தங்கம்” என்றான் - இன்பம் பொங்கிடும் கீழ் ஸ்தாயியில்! "ஐயோ" என்று அலறினாள் தங்கம் ! 6 - லாரியிலிருந்து போலீஸ்காரர்கள் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். 'டார்ச் லைட்டு'கள் பல திசைகளிலும் சென்றன. தங்கத்தின் நினைவு சுழன்றது. தலை கிறுகிறுத்தது, விட்டல் கையில் விலங்கு-பிறகு தூக்கு மேடையில் அவன் தங்கம் விதவைக் கோலம். இந்தப் பயங்கரம் அவளை ஓர் உலுக்கு உலுக்கிற்று. "அத்தான் ! அகப்பட்டுக் கொண்டோம்!” என்று வீறிட்டாள். விட்டல் விழிகளை உருட்டிப் பார்த்தான். அவள் கன்னங்களும் நனைந்து விட்டன. தங்கம் தன் ஆசை யனைத்தையும் ஒருசேர உதட்டில் சேர்த்து விட்டலை முத்த மிட்டாள். முத்தம் முடிந்தது. போலீஸ் படை "விடாதே! பிடி!" என்று கத்திக் கொண் ஓடி வந்ததைக் கண்டார்கள். விட்டலின் இடுப்பிலிருந்த கட்டாரியைத் தங்கம் எடுத்துக்கொண்டாள். போலீஸாரிட மிருந்து தப்புவதற்கு அவளுக்கு இப்போது வழி தெரிந்து விட்டது. தன் அன்பு அத்தானின் நெஞ்சில் ஓங்கி ஒரு குத்து- அவன் பிணமானான்! அந்த இரத்தம் சொட்டும் கட்டாரி அவள் கழுத்துக் குழியிலும் பாய்ந்தது! போலீஸாரிடமிருந்து விட்டலைக் காப்பாற்றினாள். வேதனையிலிருந்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டாள். சமுதாயக் கொடுமையிலிருந்து இருவருமே தப்பி விட்டார்கள்.