பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பவில்லை கண்ணாடித் துண்டுகளின் வேல் போன்ற கூரிய முனைகள் மேல் நோக்கியவாறு புதைக்கப்பட்டிருந்தன, அந்த நெடிய சுவரின் நெற்றியில்! அதனையொட்டி மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. பார்த்தாலே மலைப்புத் தட்டுமளவுக்கு உயர்ந்திருந்த பெருஞ் சுவரின் கம்பீரத்தை உற்று நோக் கியவாறு விழிகளில் மின்னுகின்ற கண்ணீரையும் துடைக்காமல் கிணற்றடியில் உட்கார்ந்திருந்தான், அந்தக் கைதி ! மரப் பலகை களால் மூடப்பட்ட அந்தக் கிணற்றின் ஆழம் வெளியே தெரியாதது போலவே அவன் உள்ளத்தின் ஆழத்தில் ஊறுகின்ற உணர்ச்சி மிக்க எண்ணங்களும் தெரியாமலே போய்விட வேண்டும் என்று ஆசைப்பட்டான் போலும் ! கட்டுடலும், கவர்ச்சிகரமான முகமும், எடுப்பான மீசையுங் கொண்ட அந்த வாலிபனின் முகத்திலேயுள்ள புத்தொளி, சிறை வாசத்தால் முழுதும் மங்கி விடவில்லை. அவனையும் உலகத்தை யும் பிரித்து ஆணவமாக நின்றுகொண்டிருக்கும் அந்தக் கனமான சுவரினைச் சபிப்பதுபோல் உதடுகளை அசைத்துக் கொண் டிருந்தான். பெரிய பெரிய ராஜ்ஜியங்களின் தலைநகரங்களையும், மாமன் னர்களையும் பாதுகாப்பதற்கு எழுந்த வானளாவிய கோட்டை கொத்தளங்கள் பொடிப் பொடியாகப் போய்விட்ட சரித்திரங் களை அவன் படித்தானோ இல்லையோ ; அதுபோல இந்தக் கோட்டையையும் சரித்துத் தகர்த்துவிட்டால் என்ன என்று று