பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் மனக்கோட்டை கட்ட அவன் தவறவில்லை. பிரான்சு நாட்டில் 'பாஸ்டிலி' சிறையை உடைத்து ஒரே நாளில் புரட்சித் தலைவர்களை மீட்டார்கள் என்ற வரலாற்று உண்மை அவனுக்குத் தெரியாமலேகூட இருக்கலாம். ஆனால் அவன் எண்ணினான் யாராவது இந்தச்சுவரைத் துளைத்துத் தன்னை மீட்டுக் கொண்டு போய்விட மாட்டார்களா என்று! அப்படி அவன் எதிர்பார்ப்பதிலே விடுதலைத் துடிப்பு இருக்க முடியுமே தவிர, நிச்சயமாக அர்த்தமிருக்க வழியில்லைதான்! ஏனெனில் அவன் அரசியல் கைதி அல்லன் ! ஆள் தூக்கிச் சட்டம், தடுப்புக்காவல் சட்டம்-இன்ன பிற அடக்குமுறைச் சட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுப் போலீசார் தங்கள் கித்தாப்பை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக, நாட்டிலே அமளியை அவர் களாகவே தூண்டிவிட்டு, அதற்கெனவே முன்கூட்டிச் சிறையில் அடைக்கிறோம் இவர்களையென்று கைது செய்யப்பட்ட விடுதலை இயக்க முன்னணி வீரர்களிலே ஒருவனல்லன் அவன்.! ‘தங்கம் நிகர் தலைவர்களைக் காராக்கிரகத்தில் தள்ளி, நாட்டிலே இருளை மேய விடுபவர்கள் யாராயிருப்பினும் அவர்களைத் துச்சமெனக் கருதித் தூளாக்குவோம் சிறைக் கோட்டத்தை' என எழுந்த பெரும் புரட்சிகள் உலக வரலாற்று நூலில் காணப்படாத ஏடுகள் அல்ல ! வை எதனையும் அந்தக் கைதியின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்க இயலாத அளவில் அவன் குற்றம் சாட்டப்பெற்றுத் தண்டனை பெற்றிருக்கிறான். அதனாலேயே குமுறல் எழுந்து எழுந்து சோகப் பின்னணி போல அடங்கிவிடுகிறது. அப்படித் தீ அணையும் போதெல்லாம் ஒரு நீண்ட பெருமூச்சு அவனது மூக்கின் நுனியைக் கருக்கிக்கொண்டு வெளிப்படுகிறது. வீட்டின் வாயிற்புறத்துத் திண்ணையில் பனை நாரினால் பின்னப்பட்ட மூங்கில் கழிக் கட்டிலில் அவன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். தூங்காத நேரங்களில் துள்ளிப் பாயும் எண்ணங்கள் காட்சிகளாக வடிவெடுக்கும் கனவுலகில் ஆடிப் பாடி மகிழ்ந்தான்... அவனுடைய ஏழைப் பெற்றோர், தங்கள் ஒரே மகனுக்குத் திருமணம் நடத்திவிடத் தீர்மானித்துப் பல இடங்களில் பெண் தேடி இறுதியில் இலட்சணவதியான ஒருத்தியை மணமகளாகத்