பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 66 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் பண்ணையாரை அவன்தான் கொலை செய்தானா? அவன் இரவு-பகல் இல்லை ; இல்லை " யென்றே ஓலமிட்டுக் கொண் டிருந்தான். அவனது முதிர்ந்த பெற்றோர்கள் ஒரே ஒரு மகனைக் கூண்டிலே போட்டுத் தங்களிடமிருந்து வேறுபடுத்திவிட்ட கொடுமையினை நினைத்து நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தனர். 66 அய்யோ! எங்கள் பிள்ளை தங்கமாச்சே வைரமாச்சே ! ஊர் வம்புக்குப் போகாத ராஜாவாச்சே! பண்ணைக்காரரைக் கொலை செய்ய ஊரிலே எத்தனையோ பேருக்கு ஆத்திரம்! உத்தண்டிக் கோனாரின் வயல் வரப்புகளையெல்லாம் அநியாய மாக அபகரித்துக்கொண்ட சண்டாளனே, பண்ணையார். அதனால் அந்த உத்தண்டிக்கு ஆத்திரம் வந்திருக்கக் கூடாதா என்ன? சிவராமன் தங்கச்சி ஓடைக்குப் போனபோது உபத்திரவம் பண்ணின அயோக்கியப் பெரிய மனுஷன்-அந்தச் சிவராமனுக்கு அரிவாள் தூக்கத் தெரியாதா என்ன? அபின் வியாபாரத்திலே கூட்டுச் சேர்ந்துகிட்டு இந்தத் துரை பாண்டியை ஏமாத்திட் டான்னு ஊரே பேசுது-அந்தத் துரைபாண்டி துண்டிச்சிருக்கக் கூடாதோ அந்தத் துரோகியின் தலையை? எல்லாத்தியும் விட் விட்டு, நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்ட எங்க மகன்தானா வஞ்சம் தீர்த்திருக்கணும்? அய்யோ கடவுளே ! ஏழை பாழைங்க தானா இந்த உலகத்திலே இளிச்சவாயனுங்க? இந்த வருஷம் எப்பாடுபட்டாவது தை மாசத்திலே அவன் காலிலே ஒரு கட்டையைக் கட்டிப் போடணும்னு தவங்கிடந்தோமே ; அவன் கதி இப்படி முடிஞ்சுதே! நாங்க என்ன செய்வோம்!” எந்நேரமும் அழுது புழுங்கினர் தாயும் தந்தையும்! சப் ஜெயிலில் ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்த அவனுக்கு ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது. நிரபராதிகள் தண்டிக்கப்படமாட் டார்கள் என்பதே அது! ரிமாண்டுக் காலமான அந்தப் பதினைந்து நாட்களில் சோகமய மான அவன் உள்ளத்தில் ஒரு சொட்டுத் தேன் விழுந்தது போன்ற ஒரு நிகழ்ச்சியும் நடை ற நடைபெற்று டைபெற்று விட்டது. அவனிருந்த சப் ஜெயில் கொட்டடியில் அவன் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு அருகில் நாலைந்து பெண்கள் அடைக்கப்பட்டிருந் தார்கள். அவர்களில் ஒருத்தி, ஏறத்தாழ அவன் கனவில் கண்ட அந்த மங்கை போலவே இருந்தாள். விசாரித்ததில் அவள் பெயர்