பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பவில்லை 87 தங்கமில்லாவிட்டாலும், அதனையொட்டிய 'பொன்னு' என்பது தான் என அறிந்து பெரு வியப்படைந்தான். அந்தப் பெண்ணின் முகத்திலே களங்கத்தின் நிழல்கூட இல்லை, இருபது இருபத் திரண்டு வயதுதானிருக்கும். இளமையின் பெருமிதம் அவள் அங்கமனைத்திலும் பூரித்துப் பொங்கிகொண்டிருந்தது. ‘ அவள் யார்? அவள் ஏன் சிறையில் வாடுகிறாள் ? ஒரு வேளை அவளும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவளா?' கேள்விகள் குடைந்தன. மெல்ல விசாரித்தான்-மற்றவர்களை! கேள்விக்குக் கிடைத்த முதல் பதில் அவனுக்குப் பெரிய திருப்தியை ஏற்படுத்தியது. அவள் திருமணமாகாதவள் ! என்னவோ சப் ஜெயிலிலேயே சிறை அதிகாரி மூலம் திருமணப் பேச்சை முடித்து, நிச்சயதார்த்தம் செய்து கொள்வது போலக் கற்பனை செய்து கொண்டு, மகிழ்ச்சி அடைந்தான். து கள்ளச் சாராய வழக்கில் ஈடுபடுத்தப்பட்டவள் அவள். ரண்டாவதாக அவளைப்பற்றி அவனுக்குக் கிடைத்த தகவல் ! அவனால் நம்ப முடியவில்லை. அப்படியே சாராய வழக்கில் அவள் கைது செய்யப்பட்டிருந்தாலும் அதை அவன் கேவல மாகக் கருதவில்லை. அவளைப் போலவே சிறு குழந்தைகளுடன் சிறைக் கம்பியை எண்ணிக் கொண்டிருந்த ஏழைத் தாய்மார்கள் சிலரைப் பற்றியும் அவன் தவறாகக் கருதவில்லை. மாறாக அனுதாபப்பட்டான். தேசத்தில் பிழைக்க எந்த வழியும் இல்லை. வழியில்லாத காரணத்தால் வயிறு காய்கிறது. மனைவி-மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். அந்தக் கொடுமையைச் சகிக்க முடியவில்லை, குடும்பத் தலைவனால்! பெரிய மனிதர்கள், பர்மிட்' வாங்கிக் கொண்டு குடிக்கிறார்கள். அதற்கு ஒரு தனி கௌரவமே சமுதா யத்தில் அளிக்கப்படுகிறது. கவலையைத் தீர்க்கக் கள்ளச் சாராயம் அருந்தும் ஏழைகளும், அந்த ஏழைகளை நம்பிக் கள்ளச் சாராயம் காய்ச்சும் பரம ஏழை வியாபாரிகளும் பரவுகிறார்கள். குடும்பத் தலைவர்களுக்கு அது சுலபமானதும்-அதைத் தவிர வேறில் லாததுமான பிழைக்கும் வழியாகத் தென்படுகிறது. போலீசில் பிடிபடும் வரையில் குடிசைத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். பாவம் அவர்களுக்குப் பெண்டாகவும், பிள்ளையாகவும், பெண்ணாகவும் வாய்த்தவர்கள் என்ன செய்ய முடியும்? தொழிலில் பங்கு கொள்ளத்தான் நேரிடுகிறது. எண்ணெய் வியாபாரி வீட்டில் இருக்கும் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் செக்கு ஓட்டத் தெரியும்.