பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் சுருட்டுக் கம்பெனி நடத்துகிறவர் குடும்பத்தினர் அனைவருமே சுருட்டு செய்யும் பயிற்சி பெறுகிறார்கள். அதுபோலவே கள்ளச் சாராயத் தொழிலும் பல பகுதிகளில் குடிசைத் தொழிலாக ருவெடுத்து வருகிறது. பங்குப் பணமும், வியாபார லாப நஷ்டக் கணக்கில் ஏற்படுகிற தகராறும் தலைமை நிர்வாகிகளைக் கூண்டிலே அடைபடச் செய்கிறதே தவிர, நீதியும்-நேர்மையும்-சட்டமும் அமுல் நடத்தப்படுகின்றன என்று யாரும் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை. அந்த நிலையில் கூண்டுக் கிளி ஆனவள் தான் பொன்னு! குடிசைத் Q தாழிலில் கூட்டு வியாபாரம் செய்த குள்ளனின் ஆசைக்கு இணங்க மறுத்தாள். அதன் விளைவாகச் சாராயக் குடத்துடன் ஓர் இரவு போலீசாரிடம் காட்டிக் கொடுக்கப் பட்டாள். பண்ணையாரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ரிமாண்டில் இருக்கும் முத்துவுக்கு அவளைப் பார்ப்பதிலே ஓர் ஆறுதல்! அவளுக்கும் கூட அப்படித்தான் என்பது இரண்டொரு நாட்களில் அவனுக்குப் புரிந்துவிட்டது. சிறைச்சாலையில் தனிக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு, வார்டர்களின் கவனிப்பும் இருப் பதால் ஒருவரை யொருவர் சந்தித்துப் பேசி அளவளாவ இயலாது என்பது உண்மை. விழிகளுக்குத் திரைபோட-வெண் பற்கள் சிந்துகின்ற சிரிப்புக்கு அணை போட யார் இருக்கிறார்கள் அங்கே? மாலையில் கூண்டிலே அடைக்கப்படும் முத்து, காலையில் சிறைக் கம்பிகளுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு வானம் வெளுப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பான். அப்போது, பெண் களுக்குத் தனிச் சலுகை என்ற முறையில் முதலில் திறந்துவிடப் பட்டுக் கிணற்றங்கரைப் பக்கம் போகும் பொன்னு, முத்து அடைபட்டிருக்கும் கூண்டினை ஆவலுடன் பார்ப்பாள். அவனும் பார்ப்பான். இருவர் விழிகளும் ஏதேதோ பேசி முடிவெடுக்கும். இப்படிப் பதினைந்து நாட்கள் நடைபெற முடியவில்லை. காரணம், பொன்னுவின் மீது போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவள் திடீரென விடுதலையாகி விட்டாள். விடுதலையாகிற நாளன்று அவள் துணிந்து, முத்துவிடம் “போய் வருகிறேன் ' என்று விடைபெற்றுக்கொண்டாள்.