பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பவில்லை 89 அவள் போனதும் அவன் மீண்டும் சிறைக் கொடுமையை அனுபவிக்கும் கஷ்டத்திற்குள்ளானான். இதுவரையில், தன் மீது கூறப்பட்ட பழியிலிருந்து தப்பவும், தன் தாய் தந்தை மனம் குளிரவும் எப்படியாவது விடுதலையாகிவிட வேண்டுமென்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்த அவனுக்கு, விடுதலைக்கான புதிய காரணமும் தோன்றி விட்டது. அதுதான் அவள் ! அவளை எப்படியாவது மீண்டும் சந்திக்கவேண்டும் என்று எண்ணித் துடித்தான் முத்து! , ரிமாண்டு' முடிந்தது. வழக்கு விசாரணைகள் தொடர்ந்தன. செஷன்ஸ் கோர்ட்டுக்கு வழக்கு சென்றது. தீர்ப்பு கூறப் பட்டது, பண்ணையாரை அவன் தான் கொலை செய்தான் என்று நீதி மன்றம் முடிவு செய்தது, முத்து தூக்குத் தண்டனையி லிருந்து தப்பினான், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது அவனுக்கு! மத்திய சிறைச்சாலையில் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்கத் தள்ளப்பட்டான். பதினான்கு ஆண்டுகள் சிறை வாசம் ! ஆனால் அவன் நடந்துகொள்வதைப் பொறுத்தும், விடுமுறைகளைப் பொறுத்தும்--ஏறத் தாழ எட்டு ஆண்டு களுக்குள் அவன் வெளி உலகைக் காண இயலும். அய்யோ- அதுவரையில் அவன் பெற்றோர்கள் கதி ? அவன் காதலித்த அந்த அழகி பொன்னு அதுவரையில் காத்திருப்பாளா என்ன? உயர்ந்த சுவரை வெறித்த கண்களால் பார்த்துக்கொண்டு உட்கார்ந் திருந்தான் முத்து. 6 C என்னப்பா, முத்து!" என்று முதுகில் தட்டியவாறு அவன் சிறைச்சாலை நண்பர்கள் சூழ்ந்தனர். “நீ என்னடா முத்து! முட்டாளாயிருக்கிறே! இதபார்... எனக்குச் செஷன்சில் தூக்குத் தண்டனை கிடைச்சுது. ஹைகோர்ட்டில் அப்பீல் செஞ்சேன் ; ஆயுள் தண்டனையா குறைஞ்சுது. அதேமாதிரி..நீயும் அப்பீல் பண்ணினா.. தண்டனை குறையும்-இல்லே, விடுதலையே ஆயிடுவே !” ஒரு கைதி, பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். அவன் மட்டு மல்ல ; சிறையில் உள்ள எல்லாக் கைதிகளுமே அவனை ‘அப்பீல்' செய்து கொள்ளுமாறு தூண்டினர். முத்து யோசித்தான். தன் இளமைக்காலத்தின் ஒரு பகுதி சிறையிலேயே சீரழிவதா? அப்பா, அம்மா வெளியில் அழுது புலம்புவதா? காதலியைக் காணாது வாடுவதா? தனக்குத் தானே கேட்டுக்கொண்டான்.