பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

இந்த வேணுவனநாதர் எப்படி நெல்வேலி நாதர் ஆனார்? வேத சர்மா என்று ஓர் அர்ச்சகர். கோயில் பூசைக்கு வேண்டிய நெல்லை எடுத்துத் தம் வீட்டின் முற்றத்தில் வெயிலில் உலர்த்திவிட்டு ஆற்றுக்குக் குளிக்கச் சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் பெருமழை பெய்திருக்கிறது. உலர்த்திய நெல் எல்லாவற்றையும் வெள்ளம் வாரிக்கொண்டு போய்விடுமே என்னும் ஆதங்கத்தோடு அர்ச்சகர் வீடு நோக்கி ஓடி வருகிறார். அர்ச்சகரின் அன்பினையும் ஆதங்கத்தையும் அறிந்த இறைவன், அந்த நெல் காய்ந்த இடத்தில் ஒரு துளி மழையும் விழாமல் காத்திருக்கிறார். அப்படி அவர் வேலிபோல் நின்று காத்ததன் காரணமாக நெல்வேலி நாதன் என்று பெயர் பெறுகிறார். நெல்வயல்கள் ஊரைச் சுற்றி நாலு பக்கங்களும் பரவி நிற்கிறதைப் பார்த்தவர்கள் இந்த ஊருக்கு நெல்வேலி என்ற பெயர் பொருத்தமே என்று ஒப்புக் கொள்வார்கள்.

இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் வந்து பாடிப் பரவியிருக்கிறார்.

மதுரையைத் தலைநகராகக் கொண்ட அந்த நின்றசீர் நெடு மாறனே இக்கோயில் கட்டினான் என்பது வரலாறு. இவனையே ‘நிறைகொண்ட சிந்தையன் நெல்வேலி வென்ற சீர்நெடுமாறன் என்று சமய குரவரில் ஒருவரான சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் பாடியிருக்கிறார். நெடுமாறனோ முதலில் சமணனாக இருந்து பின்னர் சம்பந்தரால் சைவனாக்கப்பட்டவன் என்பது பிரசித்தம். இவனது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு. இவனுக்குப் பின் வந்த பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள் எல்லாம் கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள்.

கி.பி. 950 இல் இருந்து அரசாண்ட வீரபாண்டியன் சோழர்களை வென்ற வரலாற்றைக் கூறுகிறது சில கல்வெட்டுக்கள். பதின்மூன்று பதிநான்காம் நூற்றாண்டுகளில் இருந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன், மாறவர்ம குலசேகர தேவன் முதலியவர்களது சாசனங்கள் பல கிடைக்கின்றன. இக்கோயிலில். இக்கல்வெட்டுக்களில் இறைவனைத் திருநெல்வேலி உடையார் என்றும் இறைவியைக் காமக்கோட்டமுடைய நாச்சியார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாயக்க மன்னர்களோ திருநெல்வேலியையே தலைநகராகக் கொண்டு கோயிலைப் புதுப்பிப்பதில், மண்டபங்கள் கட்டுவதில் எல்லாம் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார்கள். இப்படிப் பாண்டியர், நாயக்கர்களோடு, முகம்மதிய பக்தர் ஒருவருமே சேர்ந்து கொள்கிறார். முகம்மது அலியின் தானாதிபதி அன்வர்டிகான் என்பவரது மனைவியின் தீராத நோயைத் தீர்த்திருக்கிறார் இந்த