பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 107

கோலத்தில் வந்திருந்தார் என்பதற்காக அவரைக் கோயிலுள் செல்ல அர்ச்சகர் அனுமதிக்கவில்லை. ஆதலால் மனம் உடைந்து அகத்தியர் திரும்பி, சிறிது தொலைவில் உள்ள இலஞ்சி சென்று, அங்குள்ள முருகனை வணங்குகிறார். அந்த முருகன் இந்த அர்ச்சகர்களை வஞ்சனையால் வெல்ல வழி சொல்லிக் கொடுக்கிறான். அவன் சொல்லிக் கொடுத்த வண்ணமே துவாதச நாமம் தரித்து, பரமவைஷ்ணவராக மறுநாள் அகத்தியர் கோயிலுக்கு வருகிறார். அர்ச்சகர்களும் ஏமாந்து உள்ளே அனுமதித்து விடுகிறார்கள். உள்ளே சென்றவர் தாமே விஷ்ணுவுக்குப் பூசை செய்வதாகச் சொல்லி, மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு, கதவைச் சாத்திக் கொண்டு, நின்ற கோலத்தில் இருந்த பெருமாளை தலையில் கைவைத்து ஓர் அமுக்கு அமுக்கி, குறுகிக் குறுகுக எனக் கைலாய நாதனை நினைக்கிறார், அப்படியே அவரும் குறுகிக் குற்றாலநாதர் ஆகிவிடுகிறார். அகத்தியரால் இப்படி மாற்றப் பெற்ற இறைவனை அகஸ்தியரே பாடித் துதிக்கிறார். பாட்டு இதுதான்.

முத்தனே முளரிக் கண்ணா!

மூலம் என்று அழைத்த வேழப் பத்தியின் எல்லை காக்கும்

பகவனே! திகிரியாளா! சுத்தனே! அருள்சூல் கொண்ட

சுந்தரக் கதுப்பினானே! நத்தணி செவிய கோல

நாடுதற்கரிய நம்பி! இந்தப் பாட்டைப் படித்தால் இதில் உள்ள துதி விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் பொருத்தமாயிருப்பதைப் பார்க்கலாம். இப்படிப் பாடிக்கொண்டு வந்ததினாலேதான் வைஷ்ணவ அர்ச்சகர்கள் ஏமாந்திருக்கிறார்கள். இப்படி ஆதியில், விஷ்ணுவாகவும், பின்னர் சிவனாகவும் மாறிய இறைவனே திருக்குற்றால நாதன். நாமும் இரண்டு பெருமான்களையும் நினைத்தே வணங்கித் திரும்பலாம். குற்றால நாதருக்கு வலப்பக்கத்தில் தனிக்கோயிலில் குழல்வாய் மொழி அம்மை கோயில் கொண்டிருக்கிறாள். நின்ற கோலத்தில் அங்கிருந்து காட்சி தருகிறாள். அம்மையின் கோயிலுக்குத் தென்புறத்தில்தான் தலவிருட்சமான குறும்பலா. நான்கு வேதங்களுமே தவம் செய்து இப்படிப் பலாமரம் ஆயிற்று என்பர். இப்பலா மரத்தடியிலே ஒரு லிங்கம். இம்மரத்தில் பழுக்கிற பலாப்பழத்தை எவரும் பறிப்பதில்லை. குற்றாலத்திலே உள்ள குரங்குகளே கீறித் தின்னும் என்பர். இவ்விரு கோயில்களையும்