பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

சுற்றியுள்ள மேலப் பிராகாரத்திலேதான் நன்னகரப் பெருமாள், நெல்லையப்பர், மணக்கோலநாதர், நாறும்பூநாதர் முதலியோர் கோயில் கொண்டிருக்கின்றனர்.

குற்றாலத்தில் இறைவன், குற்றாலம், கோவிதாஸ், சமருகம் என்ற பெயருடைய ஆத்தி மர நிழலிலே எழுந்தருளியிருத்தலால் அம்மரத்தின் பெயரே தலத்தின் பெயர் ஆயிற்று என்பர். கு என்றால் பூமியாகிய பிறவிப் பிணி, தாலம் என்றால் தீர்ப்பது. ஆகவே பிறவிப்பிணி தீர்க்கும் தலம் ஆனதால் குத்தாலம் ஆகி குற்றாலம் என்று திரிந்தது என்றும் கூறுவர். ஆதி சக்தி மூவரைப் பயந்த தலமாதலால் இத்தலத்துக்குத் திரிகூடம் என்ற பெயர் வந்தது என்றும் தலபுராணம் கூறும். அதற்கேற்பவே, கோயிலுள் வடப்பக்கத்தில் பராசக்திக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. இங்கே பராசக்தி யோகத்தில் இருப்பதால் இதனை யோகபீடம் என்றும், உலகம் எல்லாம் தோன்றுவதற்கு மூலமாயிருத்தலால் தரணி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பராசக்தியே அரி, அயன், அரன் என்னும் மூவரையும் ஒவ்வொரு கர்ப்பத்தில் பயந்தாள் என்பதைக் குறிக்கத் தாணுமாலயன் பூந்தொட்டில் இச்சந்நிதியில் ஆடிக் கொண்டிருக்கிறது. இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் வந்திருக்கிறார். குற்றாலத்துக்கு ஒரு பதிகமும், குறும்பலாவுக்கு ஒரு பதிகமும் பாடியிருக்கிறார்.

வம்பார் குன்றும் நீடு உயர்

சாரல் வளர் வேங்கை கொம்பார் சோலைக் கோல வண்டு

யாழ் செய் குற்றாலம்

என்றும்

மலையார் சாரல் மகவுடன்

வந்த மடமந்தி குலையார் வாழைத் தீங்கனி

மாந்தும் குற்றாலம்

என்றும் குற்றாலத்தைப் பாடிப் பரவியவர்

அரவின் அணையானும் நான்முகனும்

காண்பரிய அண்ணல் சென்னி விரவிமதி அணிந்த விகிர்தருக்கு

இடம்போலும் விரிபூஞ் சாரல்