பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 () கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

சித்திர சபை இருக்கிறது. அம்பலக் கூத்தன் ஐந்து திருச்சபையில் அவன் கூத்தை ஆடியிருக்கிறான். திருவாலங்காட்டில் ரத்ன சபையிலும், சிதம்பரத்தில் பொன்னம்பலத்திலும், மதுரையில் வெள்ளியம்பலத்திலும், திருநெல்வேலியில் தாமிர சபையிலும் ஆடிய பெருமான் இத்தலத்தில் சித்திர சபையில் நின்று நிருத்தம் ஆடியிருக்கிறார். ஐந்தருவிக்குச் செல்லும் ரோட்டில், ரசிகமணி டி.கே.சி நினைவு இல்லத்துக்குக் கீழ்ப்புறமாகச் செல்லும் பாதையில் சென்றால் சித்திர சபை சென்று சேரலாம். இச்சபையே தெப்பக்குளத்துடன் கூடிய ஒரு பெரிய கோயில். கோயில் முழுதும் சித்திரங்களால் நிறைந்திருக்கின்றன. பெருமானும் இங்கே சித்திர உருவிலேயே அமைந்து ஆடும் காட்சி தருகிறார். ஆதலால் சித்திர சபையைக் காணாது திரும்பினால் திருக்குற்றாலத்தைப் பூரணமாகக் கண்டதாகக் கூறமுடியாது.

குற்றாலநாதர், குழல்வாய் மொழி, குற்றாலத்துக் கூத்தர் எல்லோரையும் பார்த்தபின் அவகாசமிருந்தால் வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ள இலஞ்சிக் குமரனையும் காணலாம். இன்னும் நாலு மைல்கள் வடக்கே சென்று திருமலை சென்று மலை ஏறி அங்கே கோயில் கொண்டிருக்கும் முருகனையும் வணங்கலாம்.

குற்றாலம் செல்லும் இலக்கிய ரசிகர்கள், கையோட கையாகக் குற்றாலக் குறவஞ்சியை எடுத்துப் போக மறக்க வேண்டாம். அத்தலத்தில் இருந்து கொண்டு,

வானரங்கள் கனிகொடுத்து

மந்தியோடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு

வான்கவிகள் கெஞ்சும் தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும் செங்கதிரோன் பரிக்காலும்

தேர்க்காலும் வழுகும் என்றெல்லாம் பாடல்களைப் படித்துப் பாருங்களேன். ஒரு புதிய உலகமே உங்கள் கண்முன் வராதா என்ன?

செந்தில் ஆண்டவன்

ஒரு கவிஞன் தமிழ்க் கடவுள் முருகனிடத்து அளவுகடந்த பக்தி உடையவனாக வாழ்கிறான். முருகன் என்றால் அழகன்,