பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் | 13

நாழிக் கிணற்றில் ஆம், நல்ல தண்ணீர் கிணற்றில்தான் குளித்துக் கழுவிக் கொள்ளலாம். திரும்பித் தென்பக்கம் வாயிலுக்கு வந்து சண்முக விலாசத்துக்குள் நுழைந்து கோயிலுள் செல்லலாம். முக்காணியர் என்ற அர்ச்சகர்கள் உங்களை முதலில் சுப்பிரமணியன் சந்நிதிக்கே அழைத்துச் செல்வர். அவன்தானே அங்குள்ள மூலமூர்த்தி. இந்தத் திருச்செந்தூர்தான் நக்கீரரது திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. மிகவும் பழமையான தலம் அல்லவா? பழைய சங்க இலக்கியமான புறநானூற்றிலேயே,

வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடுவேள் நிலை இய காமர் வியன்துறை

என்று குறிப்பிடப்பட்ட பதி. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்’ என்றே முருகன் சிலப்பதிகாரத்தில பாடப்பட்டிருக்கிறானே. இங்குள்ள பாலசுப்பிரமணியன் பெருமையெல்லாம் அவன் சூரசம்ஹாரம் செய்து தேவர் இடுக்கண் தீர்த்தது.ான். ஆதலால் அந்த வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

சூரபதுமன், சிங்கமுகன், பானுகோபன் என்ற அசுரர்கள் தேவர்களுக்கெல்லாம் இடுக்கண் செய்கிறார்கள். அதனால் தேவர்கள் எல்லாம் சென்று சிவபெருமானிடம் முறையிடுகிறார்கள். அவரும், அவர்கள் துன்பத்தைத் தீர்க்க் ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். அதன்படியே தன்னுடைய ஐந்து திருமுகங்களோடு ஆறாவது முகமும் கொள்கிறார். ஆறு திருமுகத்தில் உள்ள ஆறு நெற்றிக் கண்களிலிருந்தும் ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயு ஏந்திச்சென்று, அக்னியிடம் கொடுக்க அக்னியும் அந்தப் பொறிகளது வெம்மையைத் தாங்காது கங்கையிலே விட்டு விடுகிறான். கங்கை அந்தப் பொறிகளை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். அங்கு ஆறு பொறிகளும் ஆறு திருக் குழந்தைகளாக மாறுகின்றன. இப்படித்தான் வைகாசி மாதத்தில் விசாக நாளில் விசாகன் பிறக்கிறான்.

இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கின்றார்கள். இந்தக் கார்த்திகேயனைப் பார்க்கச் சிவபெருமான் உமையம்மையோடு சரவணப் பொய்கைக்கு வருகிறார். அங்கு அம்மை குழந்தைகள் அறுவரையும் சேர்த்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறார்கள். அவனே கந்தன் எனப் பெயர் பெறுகிறான். ஆறுமுகன் என்றே எல்லோராலும் அழைக்கப்