பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

அவர்கள் ஏறி வருவதற்கு எத்தனை எத்தனை பெரிய வாகனங்கள் வேண்டியிருந்தது? அவர்களுக்கு எடுபிடி வேலைசெய்ய எத்தனை எத்தனை பணியாட்கள் வேண்டியிருந்தது. தாராசுரத்தில் இருந்த அந்தப் பிட்சாடனரையும் முனிவர் மனைவியரையும் அழைத்து வர எவ்வாறு பாடுபட்டிருப்பார்கள்.

இருளிலே நெடுநேரம் கண்விழித்து இருந்து அவர்களையெல்லாம் வாகனத்தில் ஏற்றிய பின்னர்தான் கலைமணி அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். இப்படி எத்தனை இரவுகள் கண் விழித்திருப்பார்கள். எத்தனை வேளைகள் உண்ண நேரம் இன்றிக் கடலையைத் தின்று தண்ணீர் குடித்திருப்பார்கள். ஓரிடத்திலே சிலைகளை வண்டிகளில் ஏற்றி விடுவார்கள். அவைகள் கலைக் கூடம் வருமுன்னர் தான் வந்திருந்து அவைகளை கலைக்கூட வாயிலில் நின்று வரவேற்பார்கள். இப்படியெல்லாம் கலைமணி அவர்களும் அவரது துணைவர்களும் பட்ட துன்பங்களை நினைக்கும் போது நெஞ்சம் உருகும். இப்படியெல்லாம் பாடுபட்டு உருவாக்கிய தஞ்சைக் கலைக்கூடத்தில், அந்தக் கலைஞரின் பெயர் கூட இல்லை. போராடிப் பார்த்தும் புண்ணியமில்லை. என் போன்றவர்கள் புலம்புவதோடு நிற்கிறது. மாநில அரசோ, மத்திய அரசோ, கண் திறந்து பார்த்து ஆவன செய்யவேண்டும் என்பதே என் போன்றோரின் கோரிக்கை.