பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நான்முகக் கடவுள்

நான்முகக் கடவுளான பிரம்மாவுக்கு கோயிலே கிடையாது இந்த நாட்டில் என்பர். மூன்று மூர்த்திகளும் இருப்பதாகக் கூறப்படும் அந்த உத்தமர் கோயிலிலே கூட பிரம்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் ஒரு சிறிய இடம்தான். ஆனால் கலைக்கூடத்தாராகிய நாங்கள் அந்தப் பிரம்மாவிற்கு, அந்த சிருஷ்டிகர்த்தாவிற்கு அதிமுக்கியமான இடத்தைக் கொடுத்திருக்கிறோம். காரணம் அவர் செய்யும் சிருஷ்டித் தொழில் முக்கியம் என்பதற்காக அல்ல. எங்கள் கலைக் கூடத்தையே சிருஷ்டி செய்ய அவர்தான் காரண புருஷர் என்பதற்காகத்தான்.

கல்கத்தா புதைபொருள் இலாகா ஆராய்ச்சியாளர் தஞ்சை வந்து, கரந்தையில் ஆற்றங்கரையில் மண்ணில் அரைவாசி புதைந்துகிடந்த இவரைக் கல்கத்தாவிற்கே எடுத்துப்போக எண்ணினார். அதற்காக கலெக்டரை அணுகினர். ஆனால் கரந்தை மக்களோ எங்கள் பிரம்மாவை விடோம் என்றனர். மண்ணில் புதைந்து கிடந்தவர வெளியில் எடுத்து நீராட்டிப் பூமாலை புனைந்து ஏத்தத் துவங்கிவிட்டனர். இந்தக் கலையழகுடைய சிலை கிடந்த நிலையைக் கண்டுதான் இத்தகைய சிலைகளையெல்லாம் ஒன்றாக ஓரிடத்தில சேர்த்துவைத்தல ஆகாதோ என்று எண்ணினோம். கரந்தைவாசிகளும் ஒத்துக் கொண்டனர். அழகு நடை போட்டு அரண்மனைக்கு வந்தார் அவரும் வந்தது நல்ல முகூர்த்தத்தில்தான். அதனால்தான் இத்தனை சிற்ப உருவங்கள் சேர்ந்திருக்கின்றன இங்கே இன்று.

நல்ல கம்பீரமான தோற்றம். எத்தனையோ வருஷ காலமாக யோகம் செய்து சித்திபெற்ற வாய்ப்பான உடல் நிறைந்த சாந்தம் தவழும் நோக்கு எல்லாம் உடையவராய் இருக்கிறார் அவர் நான்கு முக்ததிலும் நான்கு பாவம். இதை நன்றாக எல்லோரும் உணர்வதற்காக அவரைச் சுற்றி வந்து கண்டுகளிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம் இப்போது கலைக் கூடத்திலே நுழைந்ததும் உங்கள் கண்முன்னே அழகான பதுமபீடத்தில் இருப்பவர் இவர்தான். இவருக்கு வணக்கம் செலுத்திவிட்டுத்தான் மேற்செல்ல வேண்டும். நாரணர் திருமகன் நான்முகனே ஆரணக் கலைகளின் ஆதிகர்த்தா கலைகளின் கர்த்தாமாத்திரம் என்ன? கலைக்கூடத்தின் கர்த்தாவே அவர்தானே.