பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

தகூஷிணாமூர்த்தி

முனிவர்கள் கூட்டத்தில் நால்வர். இவர்கள் வேதம், சாஸ்திரம், கலைகள் எல்லாம் கற்றுத் தேர்ந்தவர்கள். நான்மறை ஆறங்கம் முதல் கற்ற கேள்வியெல்லாம் வல்லார்கள் என்றாலும், மயக்கம் தீர்ந்தவர்கள் இல்லை. மயக்கம் தீர்வதற்கு உபதேசம் பெற இறைவனை அணுகினார்கள். அவரும் சரியென்று கல்லால மரத்தடிக்கு எல்லோரையும் கூட்டிச் சென்றார். பக்கத்தில் இருத்தினார் எல்லோரையும். இவர் தம் நடுவிலே இருந்தார் அவரும் மெளனமாக கையால் சின்முத்திரையை மட்டும் காட்டினார். அவ்வளவுதான் மயக்கம் தெளிந்துவிட்டது முனிவர்களுக்கு இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொல்லிவிட்டார். சொல்ல வேண்டியது அத்தனையையும் அவ்வளவு பேரும் அப்படியே இருந்து விட்டார்கள், இல்லை இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்று ஆலின்கீழ் இருந்து அறம் சொன்னான் அவன் என்பார். என்னதான் சொன்னான் அவன்? இயல்பாகவே பாசங்களில் நின்று நீங்கிய பதியாகிய இறைவனை, உயிராகிய பசு சென்று சேர்ந்தால், ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமும் தானே அகன்று விடாதா? இதைத்தானே கூறுகிறது சின்முத்திரை. இந்த உண்மையைத்தானே விளக்குகிறார் திருமூலர்.

பதிபசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பாசம் அனாதி பதியினைச் சென்றணுகாப் பசு பாசம்; பதி அணுகில் பசு பாசம் நில்லாவே என்று. இந்த தகழிணாமூர்த்தியை தென்முகக் கடவுளை தெற்கே பார்த்த மூர்த்தியாகவே வைத்திருக்கிறார்கள் கலைக்கூடத்தில். சின்முத்திரை காட்டும் கை கூட முறிந்து போய் இருக்கிறது. முத்திரை இல்லாமல் முகத்தாலேயே அருள்புரியும் ஆற்றல் பெற்றவர்தானே அவர் சொல்லரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தி சொருபானு பூதிகாட்டும் சின்மயானந்த குரு அவர் என்று கண்டு தெளிவது நமக்கு எளிதுதான்.