பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

சிவ பார்வதி

கைலைக்கு இந்தப் பூத உடலோடேயே செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அப்பர். அதற்காக, இறைவன் கட்டளைப்படி ஐயாறப்பன் கோயிலில் உள்ள குளத்தில் முழுகி எழுகிறார். கைலை காட்சியே கிடைக்கிறது. தான் பெற்ற அனுபவத்தைச் சொல்கிறார்.

காதல் மடப்பிடியோடும்

களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப்பாதம்

கண்டறியாதன கண்டேன் என்று ஏதோ களிறும்பிடியும், குயிலும் பெடையும், சேர்ந்து வரும் தோற்றம் எல்லாம் சிவனும் சக்தியுமாகத் தோன்றுகிறது அவருக்கு.

சேர்ந்து வருவது என்றால், இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் விலகி, அகல நடந்து, அமுத்தலாகவா வருகிறார்கள்? ஒருவரை ஒருவர் தழுவி, நெருக்கி உட்புகுந்தவர் போல் அல்லவா வருகிறார்கள். அவனை இடித்துக்கொண்டு அம்மை வருகிறதைக் கண்டால், இவள் அவன்றன் இடப்பாகத்தில் பாதியைப் பெறுவதற்கு முன்னிருந்த நிலையோ என்று கேட்கத் தோன்றுகிறது நமக்கு. இத்தனையும் தோன்றுகிறது. சிவ பார்வதி சிலையிலே.

இந்தச் சிற்பம் உருவான கதை இதுதான். சிற்பி உண்மையில் முதலில், இருவரையும் சேர்த்து உருவாக்க எண்ண இல்லை. சந்திரசேகரரைத்தான் உருவாக்க எண்ணியிருக்கிறான். கல்லில் உருவை வரைந்து வலப்பக்கத்தைச் செதுக்கி வேண்டாத பகுதிகளை வெட்டியெடுத்திருக்கிறான். இடப்பக்கத்தில் வெட்டிச் செதுக்க வேண்டிய பகுதி அதிகம் இருப்பதைக் கண்டவுடனே, அந்தச் சிறு இடத்தில், ஏன் பார்வதியையும் சேர்த்து உருவாக்கி விடக்கூடாது என்று நினைத்திருக்கிறான். சிற்றுளி வேலை செய்திருக்கிறது. ஆனால் இருக்கும் இடத்திற்குள்ளேயே சமாளிக்க பார்வதியை நெருக்கியிருக்கிறான். சிவபெருமானைச் சுற்றித் தழுவும் ஒரு கொடியாக அவளை ஆக்கியிருக்கிறான். இப்படித் தழுவும் கொடியையும். கொடியை அனைத்துக் கொள்ளும் கொம்பையும் கண்டால்,

மஞ்சிடை வயங்கித் தோன்றும்

பவளத்தின் வல்லி அன்ன குஞ்சரம் அனைய விரன்

குவவுத்தோள் தழுவிக் கொண்டாள்

என்ற கம்பர் பாடல் ஞாபகத்திற்கு வராமல் போகுமா?