பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

பிகூடிாடனர் - கங்காளர்

பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமான் தான் எத்தனை எத்தனை மூர்த்திகரமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்? அவனா வெளிப்படுத்திக் கொள்கிறான்? அவன் உருவைக் காணத் துடிக்கும் சிந்தனைச் சிற்பிகள் வெளிப்படுத்த முயலுகிறார்கள். அவ்வளவுதான்.

ஆடவல்லானாக, கயிலாயநாதனாக, பால்வண்ண மேனியனாக, பசுபதியாக, உமாமகேசுவரனாக, ஆபத்சகாயனாக எல்லாம் பாராட்டப்பெறும் பரமேஸ்வரனை, பிறைகுடும் சடை மேலோர் புனலும் சூடி, அனல்கொண்டு அந்திவாய் வண்ணங் கொண்டு பலியேற்கும் பெருமானாகவும் கற்பனை பண்ணியிருக்கிறார்கள். அவன் கேட்கும் பலி, அன்பும் ஆணவமும் என்றும் குறித்திருக்கிறார்கள். அதற்காக கதை கட்டியிருக்கிறார்கள்.

தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க சிவபெருமான் பிக்ஷாடனர் உருவில் வந்தார் என்பது கதை. அவர் தன் மேனி அழகில் மயங்கி ரிஷி பத்தினிகள் எல்லாம் நிறையழிந்தனர் என்பது கற்பனை. அந்தக் கதைக்கும் கற்பனைக்கும் வடிவம் கொடுத்திருக்கிறான் சிற்பி வருகிறவன் உள்ளிருப்பவர்களையெல்லாம் வெளியில் இழுக்க தன் டமருகத்தை கொட்டி முழக்கி ஒலித்துக்கொண்டே வருகின்றான். அவன்றன் அழகிய உருவைக் கண்டு ரிஷிபத்தினிகள் மயங்கினார்களோ இல்லையோ, கவிஞன் மையலாகி நிற்கிறான். வருகின்றவன் வடிவழகை, அப்படியே சொல்லிச் சொல்லி மகிழ்கிறான், நல்ல பாட்டிலே.

அடியில் தொடுத்த பாதுகையும்

அசைந்த நடையும் இசைமிடறும் வடிவில் சிறப்ப நடந்தருளி

மூழை ஏந்தி மருங்கணைந்த தொடியில் பொலிதோள் முனிமகளிர்

சுரமங்கையரை மயல்பூட்டி படியிட்டு எழுதாப் பேரழகால்

பலிதேர் பகவன் திருஉருவம். பாட்டிற்கு விளக்கம் தேவை இல்லை. கலைக்கூடத்தின் சிறப்பையெல்லாம் தன் புகழாக்கிக் கொள்ளும் இவனைக் கண்டால் அவனே விளக்கம் கூறுவான்.