பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

பெற்றுப் பண்பட்டு வந்திருக்கிறது. இதே உள்ளத்தைக் குருவின் மேதை மேலும் பண்படுத்தியிருக்கிறது.

குருமணியும் கலைமணியும்

‘பாஸ்கரனது உள்ளம் ஆனந்தப்படுகிற உள்ளம். குழந்தை உள்ளமே என ரசிகமணி டி.கே.சி கூறியுள்ளார், ராஜாஜிக்கு எழுதிய கடிதம் ஒன்றிலே. எந்த விஷயத்திலும், மெய்யைக் கண்டு எடுத்துக்காட்டி வந்த டிகேசி இந்த உண்மையைக் கண்டார். குழந்தை உள்ளம் படைத்தவர்கள் வெகு சிலரே. அதில் ஒருவர் பாஸ்கரத் தொண்டைமான் என்று ராஜாஜி மேலும் விளக்கம் தந்து 9 ஆண்டுகளுக்கு முன் கொண்டாடப்பட்ட கலைமணியின் மணிவிழாவை முன்னிட்டு தம் ஆசிகளை அனுப்பி வைத்தார்.

குழந்தைக்கு அறுபதாம் ஆண்டு விழா நிறைவெய்தி அறுபத்தொன்றாம் வயது பிறக்கிறது.

இந்த ஆசைமுகம் தனக்கே உரிய இன்நகையுடன், அமுதமாகப் பருகுகிறது, அறிஞர் பிரானின் ஆசியையும் குருவின் அருளுரையையும் என்பதைச் சொல்லவா வேண்டும்?

குருமணி, கலைமணியை ஊடுருவிப் பார்த்துவிட்டார். தெள்ளத்தெளிந்தேறிய ஆசிரியபிரானின் கலைக் கொள்கையுடன் ஒட்டி ஒன்றிப் போய்விட்டது சீடருள்ளம்.

சிறு குழந்தைகளாக மாறிப் பிறந்தாலன்றி நீங்கள் பரமபிதாவின் பரமண்டல ராச்சியத்தில் புக முடியாது என்கிறது கிறிஸ்துவ வேதம். நம்முடைய கிழடு தட்டிய முகத்தோடு அகத்தையும், பார்த்துத்தான் அது அப்படிப் பேசுகிறது. எப்படியிருந்தாலும் கலையுள்ளத்திற்குக் குழந்தையுள்ளம்தான் திறவுகோல். வேறு கள்ளச் சாவி திறக்காது. இந்த உண்மையை அண்மையில் தமிழ்நாட்டில் நிலைநாட்டியது டி.கே.சி மேதாவிலாசம்.

சீடரத்தினம்

கவி ரவீந்திரரின் கீதம் ஒன்றில் துள்ளிக் குதித்துக் கூத்தாடி ஒடிப் போகிறாள் ஒரு பாப்பா, சடையும் தாடியுமாக இருந்த யோகியை நோக்கி.

தாத்தா நான், உன்னைப் போல எப்போது அவ்வளவு பெரியவள் ஆவேன்? என்று கேட்கிறாள். அதற்கு அவர் பாப்பா