பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 149

உன்னைப் போல் ஆக வேண்டுமென்றுதானே நான் இத்தனைக் காலமாக தவம் கிடக்கிறேன் என்கிறார். கவிதையுலகில் டி.கே.சிநீண்ட காலம் மெய்யையும் பொய்யையும் சோதித்துப் பார்த்தார். தமிழ்த்தாயின் அருளாகிய தவசித்தி பெற்றுவிட்ட கலா யோகியானார். அவர் கண்டுபிடித்த ஒரு முதன்மையான சீடரத்தினம் நம் கலைமணி.

புகழேணி

காரிய உலகில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் எம்.ஏ., ஐ.ஏ.எஸ். பரீட்சைகளில் தேறி உத்தியோக ஏணியில் படிப்படியாக ஏறிடத் தண்டல் நாயகமும் (கலெக்டர்) ஆகிவிட்டார். குடும்பத்தை சரிவரக் காப்பாற்றிச் சில வாழ்க்கை வசதிகளும் செய்து கொண்ட சொந்தக் காரியம் இது. அந்தப் புகழ் மங்கி மறைந்து போகக் கூடியதுதானே?

ஆனால், ஓர் இலக்கிய சக்தியாக ஓங்கி, கலப்படமில்லாத கலையுணர்ச்சியை இதய அழகாகச் சேர்த்து, சிற்பக் கலையுலகம் புகுந்து, கல்லும் கதை சொல்லும். கவிபாடும், தத்துவம் பேசும் என்பதையெல்லாம் கண்டுகாட்டிய புகழ் கொஞ்சமோ, இந்தப் பாஸ்கரனுக்கு மறைவு ஏது, தமிழ்ச் சிற்பிகளின் அற்புதச் சாதனைகளை ஒரு சிற்றறையில் பெரும் பொக்கிஷம் பார்ப்பது போல் பார்த்து மக்கள் அனுபவிக்கும்படி நம் கலா பாஸ்கரன் உருவாக்கியிருந்த தஞ்சைக் கலைக்கூடத்தைப் பார்க்கும் பேறு பெற்றேன். அதுவும் அது பற்றிய இவரது விளக்கங்களும் கூட அற்புத சாதனைகளாகவே தோன்றின. ----

அந்தக் கலைக்கூடம் மூடி வைத்திருந்த அமுத கலசமொன்றை சற்றே திறந்து காட்டுவதுபோல காட்டியது. எங்களுக்குத் தொண்டைமான் பாஸ்கரனின் உள்ளமாகிய கலைக்கூடத்தையும்.