பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

கம்பன் திருஅடியான்

கன்னித் தமிழத்தொண்டன் செம்பு,சிலை, சிற்பத்

திறன்ஆய்வான் - நம்பன்மால் வீற்றிருக்கும் ஆலயங்கள்

மேவி அவற்றின்சீர் சாற்றியவன் பாஸ்கரனேதான்.

காடு, மலை, வாய்க்கால்,

கழனி, குளம், சாலை, இடி பாடுகளும் சென்றடைந்து

பார்த்தெடுத்த கேடில் சிலைக்கூட்டந் தன்னையவன்

சேமித்தான் தஞ்சைக் கலைக்கூடம் கண்டதிலே காண்.

தேடிச் சிலைகளுடன்

செப்புப் படிமங்கள் நாடிக் கொணர்ந்தங்கே

நாட்டினான் - கூடிநிதம் மக்கள்.பலர் நோக்கி

மகிழ்கின்றார், பாஸ்கரனுக்கு எக்காலும் நன்றி இசைத்து.

கல்லில் மலரும்

கலையழகெல் லாம்திரட்டி வெல்லத் தமிழால்

விருந்தளித்த நெல்லைநகர் ஈந்தளங்கள் பாஸ்கரன்தான்

எம்பெருமான் பொன்னடிக்கிழ் சாந்தியுடன் வாழ்வான் சமைந்து.

ஒத்த பல ஆலயங்கள் ஓங்கிவிட்டதென்றறிந்து எத்தனையோ கோயிலவை ஏங்கி நிற்கும் இத்தரையில் நின்றுவளர் தம்புகழும் நீளுதற்குப் பாஸ்கரன்தான் என்று வருவான் இங்கே என்று.