பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஓர் இலக்கிய சகாப்தத்தின் நிறைவு

நா. கிரிதாரி பிரசாத்

மனித வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்று ஆங்கிலப் Gugirstfluuii Bertrand Russal Gogleugis gi :

“கண்ணுக்குப் புலப்படாத மலை உச்சிகளில் பெய்யும் மழைத்துளிகள் சிறு அருவியாகத் திரண்டு, ஆறாகப் பெருகி, நீண்டு, அகன்று, சலனமற்று சமுத்திரத்துடன் கலந்து தன்னைக் கரைத்துக்கொள்வது போல், மனித வாழ்வு தொடக்கத்தில் சிறியதாய், ஆனால் செல்லச் செல்லப் பெரியதாய் அமைய வேண்டும். சமாதானமும் சாந்தியும் அதன் இலக்கியங்களாகும்.”

எனது அருமை நண்பர் திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் என் மனத்தில் உதிக்கும் முதல் எண்ணம் இதுவே. அரசாங்க அலுவலகத்தில் ஒரு சிறு குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கி தன் சலியா உழைப்பினாலும், நல் இயல்பாலும் ஒரு மாவட்ட கலெக்டராக உயர்ந்த அவருடைய வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. நல்வாழ்வு வாழ்வதற்கு நற்சிந்தனைகள் இன்றியமையாதவை. அத்தகைய நற் சிந்தனைகளில் தலையாய ஒன்று, தனக்கென வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும் என்னும் சிறந்த எண்ணமே.

இப்பெருமகனாரைப் பற்றி அடியேன் கேட்டதுண்டு. ஆனால் நேரில் கண்டதில்லை. எங்கள் முதல் சந்திப்பு, பத்து ஆண்டுகளுக்கு முன் கரூர் பொது சமய சன்மார்க்கத்தில் நடைபெற்றது. அன்று அடியேன் பகவான் இராமகிருஷ்ணர் என்னும் தலைப்பில் பேசியதாக நினைவு. திரு. தொண்டைமான் அவர்கள் “எவ்வுருவோ நின் உருவம்” என்னும் காரைக்கால் அம்மையாருடைய