பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 167

அவரைப் பார்த்தவர்கள், யாரும் நீரிழிவு வியாதிக்காரர். இவர் என்று சொன்னால் நம்பமாட்டார்கள். காப்பி சாப்பிடும் போது சீனிக்குப் பதிலாக துளி சாக்கிரின் சேர்த்துக் கொள்வார்.

அவரிடம் எனக்கு மிகமிகப் பிடித்த குணம், மனம் திறந்து பேசுகிறதும், உடம்பு குலுங்க சிரிக்கிறதும்தான். இப்பொழுது நினைத்தால் கூட அந்தச் சிரிப்பு என் கண்முன் வந்து தெரிகிறது.

பாஸ்கரத் தொண்டமான் அவர்கள் தமிழர்களுக்குப் பல நல்ல காரியம் செய்திருக்கிறார். தன் வாழ்நாளில் டிகேசியின் கடிதங்களில் ஒரு பகுதியை அச்சுக்குக் கொண்டு வந்து புத்தகமாக வெளியிட்டது.

தஞ்சை மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது புதைந்து கிடந்த நமது புராதன காலத்துச் சிற்பங்களைச் சேகரித்து ஒரு கலைக்கூடமாக அமைத்திருப்பது.

தன்னுடைய உத்தியோக காலத்தில் நடந்த ரஸமான சம்பவங்களைத் தொகுத்து எழுத எண்ணியிருந்தார். இது நிறைவேறியிருந்தால் தமிழுக்கு அருமையான புத்தகம் கிடைத்திருக்கும். இதை சாவகாசமாக, நன்றாகச் செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.

சில சமயம் நாம் உட்காாந்து பேசிக் கொண்டிருக்கும் போது சொல்கிறோமே, “பொழுது போனதே தெரியலையே, சே, எவ்வளவு நேரமாகிவிட்டது” என்று.

தொண்டமானுக்கு நேரமாகிவிட்டது. நேரம் போனது அவருக்கும் தெரியவில்லை. அங்கவஸ்திரத்தை உதறித் தோளில் போட்டுக்கொண்டு விட்டார்.

இனி யாரால் தடுக்க முடியும் அதை