பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 171

சோர்வின்றியும் அவர்களால் இருக்க முடிகிறது. அவர்கள் உள்ளத்துக்கு உவந்த இலக்கியப் பணி எந்தவித இடையூறும் இல்லாது நடைபெற்று வருகிறது.

அவர்கள் இலக்கியப் பணியைப் போன்று, அவர்களிடம் காணப்படும் குண நலங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து நோக்கும் போது அவர்கள் புகழும் பண்பாடும் மிக மிக விரிந்துகொண்டே போகும். அவர்களைப் பற்றி மதிப்பு நம் உள்ளத்தில் என்றும் இல்லாத அளவு உயர்ந்துவிடும். எங்கள் தாத்தா ரசிகமணி டி.கே.சி அவர்களைக் குருவாகக் கொண்டு இலக்கியப் பணி புரியும் தமிழன்பர்கள் எல்லாரிலும் வயதில் மூத்தவர் தொண்டைமான் அவர்கள். ரசிகமணி டி.கே.சி அவர்களைப் பற்றி தொண்டைமான் அவர்கள் நினையாத நாள் கிடையாது. பேசாத மேடை கிடையாது. எழுதாத எழுத்துக் கிடையாது. தொண்டைமான் அவர்கள் இலக்கியப் பேச்சில் உயர்வு பெறும் மூன்று பெயர்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பர், ரசிகமணி டி.கே.சி திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி, மேற்கண்ட மூன்று பெயர்களோடும் தம்மை இணைத்துக் கொண்டு அயராது தமிழ்த் தொண்டாற்றி வரும் பெரியார் ரீ பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தமிழ் இலக்கிய சேவையும் கலா ரசனையையும் வளர்க்க ஆண்டவன் அருளை

வேண்டுகிறேன்.

o

ஆனந்தவிகடன் ஆசிரியர் தேவன் அவர்களுடன்...