பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 1 75

பார்வையனைத்தும் அவர்மீதே சென்றது. நானும் இப்போதுதான் அவரை முதன்முதலாக நேரில் காண்கின்றமையால் உருவத்தை கண்ணோட்டமிட்டேன்.

அல்லையாண்டு அமைந்த மேனி அழகு. இளநகை தவழும் வதனம் - கழுத்தில் புரளும் ஜரிகை அங்கவஸ்திரம் - நிமிர்ந்த நோக்கு - தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்பது போன்ற தோற்றம். இப்படி அவரைக் காண்பதிலேயே என் மனம் லயித்துவிட்டது. முடிவாக அவர் என்னுள்ளத்தை அப்படியே அள்ளிக்கொண்டு விட்டார் என்றே கூற வேண்டும்.

பின்னர் அதிகாரிகள் பலர் அவருக்கு அறிமுகப்படுத்தப் பட்டனர். அன்பொழுக, அகம் மலர, அவர் அனைவரிடமும் பேசியதை முகம் பிரதிபலித்தது.

விருந்தெல்லாம் முடிந்து கலெக்டர் பேசத் துவங்கினார். அவரது பேச்சில் நகைச்சுவை புரண்டது. குற்றால அருவி பொழிந்தது. கம்பன் கவிநயம் மிளிர்ந்தது. அதில்தான் எத்துணைக் கவர்ச்சி! அன்று அவர் சொன்ன திருநெல்வேலி ஹாஜர் சிரஸ்தார் ஒருவரின் கதை என் சிந்தைண்ய விட்டகலாத வண்ணம் ஆழப் பதிந்துவிட்டது. பக்கத்திலிருந்த நண்பர் அவரது சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, “அருமை, அருமை, எந்தக் கலெக்டர் சார், இவ்வளவு அருமையாகப் பேசினார்? என்றார்.

கலெக்டரின் இனிய பேச்சு முடிந்தது. மனமகிழ் மன்றப் பார்வையாளர் புத்தக (visitorsbook)த்தை அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். என்ன எழுதுகிறார் என்று பார்க்க எல்லோருக்கும் ஆவல். அவரது நாற்காலிக்கு அருகில் பின்னே சென்று நின்று கொண்டோம். அவரது கரம் விரைந்தது. அது சிருஷ்டித்த அழகழகான எழுத்துக்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன. என்ன அழகிய தமிழ்க் கையெழுத்து? இப்படியும் ஒரு கலெக்டரா? காண்பது கனவா அல்லது நனவா? புரிவதற்கு எனக்கு நெடுநேரமாயிற்று.

திருப்பத்தூரிலே வட்டார அபிவிருத்தி அலுவலகத் திறப்பு விழா. கலெக்டர் உயர்திரு. தொ.மு.பா. அவர்கள்தான் அன்றைய விழாவிற்குத் தலைவர். நறுக்குத் தெரித்தது போன்று அன்று பேசினார் அவர். அரசாங்க ஊழியர்களிடையே நிலவும் ஒருசில குறைபாடுகளை அன்று அவர் வெள்ளிடையாக அனைவர்க்கும்