பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 – தொண்டைமான் ஒரு கவிஞர்

கவிஞர் எஸ். கே. இராமராசன்

“சொல்லைக் குழைத்துச்

சுவையுறச் செய்திட்ட

சொர்ணக் கவிதையில்

சொர்க்கமுண்டு!”

என்று பாடிய பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் தமிழாகப்

பிறந்து, தமிழாக வளர்ந்து தமிழாகக் கனிந்தவர்! அவர் செல்லுமிடமெல்லாம் தமிழ் செல்லும்! எங்கு சென்றாலும் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்பார்! காவிரி செல்லும் இடந்தோறும் பூவிரி சோலை பொங்கும்! தென்றல் உலாவிடும் இடந்தொறும் நறுமணம் கமழும்! ஞானிகள் செல்லும் இடந்தொறும் பக்தியுணர்வு செழிக்கும்! நம் தொண்டைமான் ஆட்சி நடத்திய நகர்களிலெல்லாம் கம்பன் விழா நடைபெறும்!

அமரர் பாஸ்கரத் தொண்டைமானைத் தமிழ்கூறு நல்லுலகம் சிறந்த எழுத்தாளர் என்று தெரிந்து கொண்டதன்றிக் கவிஞர் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை. காரணம் அவர் கவிதை நூல் வெளி வராததே! தொண்டைமான் அவர்களே தம்மைக் கவிஞர் என்று சொல்லிக் கொள்வதில்லை.

நாமக்கல்லில் நடந்த கம்பன் திருவிழாவிற்குத் தொண்டைமான் அவர்கள் வந்திருந்தார்கள். கவிரங்கத்திற்குத் தலைமை தாங்கினார்கள். தலைமையுரை இனிய கவிதையாக உருவெடுத்தது. அக்கவிதையில் மகேந்திரப் பல்லவனின் சிறப்பையும் நாமக்கல் அனுமனைப் பற்றியும், நாமகிரித் தாயைப் பற்றியும் சிறப்புறப் பாடியிருந்தார்கள். அக்கவிதையைக் கேட்ட அவையினர் மெய் சிலிர்த்தனர். கவிதையை நுகர்ந்த நான், கவியரங்கம் நிறைவேறிய பிறகு தொண்டைமான் அவர்களிடம், “தங்கள் கவிதை எங்களை