பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 183

உருக்கிற்று. கவிதையின் ரீங்காரப் பண் எங்கள் செவியில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. தாங்கள் காற்றிலே கரைத்த கவிதையை நாங்கள் கருத்தினில் நுகர்ந்தோம். இனி மீண்டுமொருமுறை சுவைக்க வேண்டுமென்றும் ஆவல் எழுந்தால் என்ன செய்வோம்? ஆதலால் தங்கள் கவிதைத் தொகுப்பை நூலாக வெளியிடுங்கள்” என்றேன்.

அப்போது தொண்டைமானவர்கள், “தம்பி! நான் கவிஞனல்லவே! நண்பர்கள் வேண்டுகோட்கிணங்கி, ஏதோ கவிதைகள் பாடுகிறேன். இவற்றையெல்லாம் நீ உண்மைக் கவிதை என்று நினைத்துவிட்டாயா?” என்றார்கள். என் உள்ளம் கொஞ்சம் வாட்டம் அடைந்தது. தொண்டைமானவர்களின் அடக்கம் நாட்டுக்குப் பேரிழப்பாகிவிடக்கூடாதே” என்று எண்ணினேன். ஐயா அவர்களைப் பார்த்து, “நீங்கள் கம்பன், வள்ளுவன் போன்ற கவிச்சக்கரவர்த்தி களின் கவிதைகளைப் பயின்றதனால் உங்கட்கு இங்ஙனம் தோன்றுகிறது. பாடினால் கம்பனைப் போன்று பாட வேண்டும். இல்லையென்றால் சும்மாயிருக்க வேண்டுமெனக் கூறுகின்றீர்கள். நான் பலமுறை இதைக் கேட்டிருக்கிறேன். வானத்திலேயுள்ள நட்சத்திரங்களைப் போன்று மலர முடியவில்லையே என்று மல்லிகை மலர மறந்திருந்தால், மாணிக்கம் போல் மலர முடியவில்லையே என்று ரோஜா மலர மறுத்திருந்தால், அமுதம் போன்று இனிமை தர முடியவில்லையே என்று மாங்கனி கனிய மறந்திருந்தால் நாட்டுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். மங்கையர் கூந்தலில தான் அழகு பெறுமா?’ என்றேன்.

அப்போது தொண்டைமானவர்கள், “என் கவிதை மல்லிகை மலர் போல மணக்கிறதா? ரோஜாவைப் போல அழகு பெற்றிருக்கிறதா? மாங்கனி போல் இனிக்கின்றதா?’ என்றார்கள்.

நான்,

“கற்பனையாம் தேரேறிக்

கனவுலகில் சஞ்சரித்து அற்புதமாய்க் கண்டவற்றை

அமுதொழுகும் இசைநிறைந்த சொற்களிலே தாண்மைத்துச் செல்லும் திறம் படைத்த பொற்புடைய புண்ணியனைப்

புகழ்க் கவிஞன் என்றிடுவார்”