பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

என்னும் கவிதையில் மல்லிகையின் மணத்தை நுகர்கிறேன்.

“மங்கைப் பருவமுன் மேனி முழுவதும் பொங்கி வழியுதடி! - பெண்ணே, பொங்கி வழியுதடி! கன்னிப் பருவத்துன் காதல் அழகெல்லாம் கட்டுக் கடங்காதடி! - கண்ணே, கட்டுக் கடங்காதடி! தங்கச் சிலைபோல தழைக்கும் அழகினில் அங்கம் குழையுதடி ! - என்றன் அங்கம் குழையுதடி மானின் விழியால் மருண்டு நீ நோக்கினால் மேனி சிலிர்க்குதடி - என்றன் மேனி சிலிர்க்குதடி!”

என்னும் கவிதையில் ரோஜாவின் அழகு இல்லையென்று யாரேனும் சொல்வார்களா?

“அந்திதரு சித்திரத்தின்

அதிசயங்கள் கண்டிருந்தேன்! பொன்னுருக்கிக் கொச்சி மஞ்சள்

பொடியும் இடைகலந்து விண்ணை வியப்பாக்கும்

விந்தைகளைக் கண்டிருந்தேன்! செக்கச் சிவந்திருக்கும்

செவ்வானத் திடையே ஒக்க உயர்ந்துள்ள

உயிர் வரைகள் எத்தனைதாம்! நீண்ட குழல் புரள

நீந்துமொரு கன்னியைப் போல் மூண்ட முகிலொன்று

முன்னோக்கிச் சென்றது காண்! வெள்ளி விளிம்பு கட்டி

விளங்குகின்ற காட்சிகண்டு உள்ளம் பறிகொடுத்து

உன்மத்த னாயிருந்தேன்!” என்னும் கவிதையில் மாங்கனியின் தீஞ்சுவை சொட்டுகின்றதே! என்றேன்.