பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் } &7

விவிலியக் கதை தமிழில் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா! -

உலகம் படைக்கப்பட்ட தைத் தொண்டைமான் சைவ சித்தாந்தத்தின் வழி நின்று அழகுறப் பாடுகிறார். இப்பகுதி தொண்டைமானவர்கள் கூத்தப் பிரான் பால் வைத்த காதலை விளக்குகின்றது. இதுவரை எந்தச் சைவ சித்தாந்தியும் இப்படிப்பட்ட கவிதையை யாத்திருக்க முடியாதென்றே சொல்லலாம். கோனரிராஜபுரம் நடராஜ மூர்த்தியைப் பார்த்துப் பார்த்துப் பூரித்த உள்ளம் கவிதையாக உருவெடுக்கிறது. இந்தப் பகுதியை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்நடனத்தைக் காண்பதற்கல்லவா தேவர்களும் முனிவர்களும் தவங்கிடக்கிறார்கள்! இந்த நடனத்தில் எல்லாத் தத்துவங்களும் அடங்கியுள்ளன. இந்தியனுடைய தத்துவங்கள் பல்லாண்டு பல்லாண்டு புரிந்த தவப் பயனல்லவா நடராஜ மூர்த்தி. நம் கவிச்சக்கரவர்த்தி கம்பன் இம்மூர்த்தியில் தன்னையே மறந்து ஈடுபட்டது உலகமறிந்த உண்மையல்லவா?

இந்த மூர்த்தத்தை நம் தொண்டைமானவர்கள் யோகம், விஞ்ஞானம், பக்தி இத்தனையும் கலந்தல்லவா பாடுகிறார். தோற்றந்துடி யதனில் என்று உண்மை விளக்கம் கூறுகிறது. இச்சொற்றொடருக்கு, விரிவுரை செய்கின்றார் நம் கலைமணியவர்கள்!

“அம்பலத்தில் ஆடுகின்ற

அரன்கையின் துடியோசை அம்பரம் எல்லாம் பரவி

ஆக்கினது படைப்பினையே! துடியொலிக்கத் துடியொலிக்கத் துடித்ததுயிர்த் தத்துவமே! அடிபெயர்த்து நடைபயிற்சி

ஆடுகின்ற ஆட்டமதில் அண்டங்கள் தாமுருண்டு

ஆண்பெண்ணும் உருவாகி மண்டலத்தில் நிறைந்து விட்டார்

மக்களொடு மற்றவரும்” இறைவன் உலகத்தைப் படைத்தான். “இறைவனை யார் படைத்தார்” என்று கேட்கிறார்கள். கேட்க வேண்டிய கேள்விதான்! அக்கேள்விக்கு நம் தொண்டைமானவர்கள் அழகான விடை