பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைக் களஞ்சியம்

 17

இத்தகைய இனிய தமிழ்ப் பாட்டிசைத்த கவிஞரை ஆதரித்த செல்வர், முத்துச்சாமி வள்ளல், அவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள இராசவல்லிபுரம் என்னும் நல்லூரில் தோன்றியவர். “தருநிகர் கொடையன் தெருளும், நன்னடையன்” என்று தக்கோரால் பாராட்டப் பெற்றவர். தமிழ் நலம் கொழிக்கும், காந்திமதியம்மைப் பிள்ளைத் தமிழை நல்ல வண்ணம் வெளியிட்டருளிய தச்சனல்லூர் கலை மன்றத்தார்க்கும், அந்நூலுக்கு அரும்பொருள் விளக்கம் அருளிய, பேராசிரியர் புன்னைவனநாத முதலியார் அவர்களுக்கும், தமிழகத்தாரது மனமார்ந்த நன்றி என்றும் உரியதாகும்.

சென்னை.

ரா.பி. சேதுப்பிள்ளை

22.6.57

துறவியும் மங்கையும் கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம்