பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

தருகின்றார்கள். இறைவனை மனிதன் படைத்தான் என்று விடை கூறுகிறார். இவ்விடை ஆழ்ந்த உணர்வற்றவர்களுக்கு நாஸ்த்திக விடையாகத் தோன்றும். இறைவனுக்கு, “ஒருநாமம் ஒருருவம் ஒன்றமிலார்க்கு ஆயிரந் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ? என்று மணிவாசகர் பாடுகிறார். எனவே, உருவமற்ற இறைவனுக்கு உருவங் கொடுத்தவர்கள் நாம். வைணவ சித்தாந்தமும் இக்கருத்துக்கு உடன்படுகிறது. இறைவன் திருமேனியை, ‘தமருகந்த உருவம் என்றும் இறைவன் திருப்பெயரை, ‘தமருகந்த பெயர் என்றும் பிரபந்தம் பேசுகின்றது. “எவ்வண்ணம் சிந்தித்த திமையா திருப்பரேல் அவ்வண்ணம் ஆழியான் ஆம்” என்ற பேசுகிறது வைணவம். இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்த தாலல்லவா நம் கவிச்சக்கரவர்த்தி கம்பன், ஆயாத சமயமும் நின் அடியவே அயலில்லை என்று பேசினார். இப்பகுதிகளை நன்கு பயின்று தெரிந்தவர் நம் தொண்டைமானவர்கள். அதனால்தான் நம் தொண்டைமானவர்கள் தில்லைக் கூத்தனைக் காணும் பொழுது மனங்குழைவது போலச் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரைக் காணும் பொழுது அகங்குழைகிறார். இனி, கடவுளை மனிதன் படைத்த பாங்கைக் காண்போம்.

“அந்தக் கடவுளுக்கும்

அழகான உருவமதைச் சிந்தைச் சிலிர்ப்பாலே

செய்யப் புறப்பட்டார். அருவம் உருவம்

அருவுருவம் என்று சொலும் உருவமிலா இறைவனுக்கும்

உருவமதைக் கற்பிக்கத் தன்னைப் படைத்ததொரு

தலைவனையே தான் படைக்க முன்னி எழுந்தான் மனிதன்

முற்றியநல் அன்போடு அஞ்சு பெரும் பூதமதில்

அணுவுக்குள் அணுவாக விஞ்சும் நிலையாலே

விளங்குகின்றான் இறைவன். ஊணாக உயிராக

உணர்வாக அணுவினுள்ளும் காணாத பேருருவாய்க்

கலந்து நின்று தொழிலியற்றி