பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

நீலக்கடல் அலையில்

நின்று கவிசொல்லி பொங்கும் திரைகளிலே

போதம் விளைவித்து எங்கும் அவன் ஒளியை

எல்லோர்க்கும் காட்டிடுவான்” கம்பன்பால் தொண்டைமான் கொண்ட ஈடுபாடு கவி வெள்ளமாகப் பெருக்கெடுக்கிறது. சிவபரஞ்சோதியை, சீவக்கடலை நேரே கண்டபோது திருமூலர்,

“யாரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை யாரறிவார் அதன் அகலமும் நீகளமும்” என்று உணர்ந்து கூறினார். திருமூலரின் வியப்பிற்குக் குறைந்ததன்று நம் கலைமணியின் வியப்பு: தொண்டைமான்,

“அன்பென்னும் புணையேறி

அறிவென்னும் தண்டோடு கம்பனெனுங் கடலினிலே

கரைகாணப் புறப்பட்டார்”

இப்படிகளில் கம்பன் கவிதையைப் பயிலும் முறையினைத் தெரிவிக்கின்றார். வெற்றறிவுடையார்க்குக் கம்பனுடைய சிறப்புத் தெரியாது. அதேபோல அன்பு மாத்திரம் பெற்றவர்களும் கம்பக்கடலை நீந்த முடியாது. கம்பனுடைய நூலைப் பயில்வதற்கு இதயமும் வேண்டும். முளையும் வேண்டும் என்பதை எவ்வளவு அழகாகத் தெரிவிக்கிறார், பாருங்கள்!

தலைவனொருவன் ஒரு தலைவியைக் கண்டு காதல் கொள்கிறான். அவளும் இவனை விரும்புகிறாள். இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தியவர்களே! கைக்கிளைக் காதலர் அல்லர். ஐந்திணைக் காதலரே. அத்தலைவி இவனிடத்தில் அன்பாகப் பேசுகிறாள். காதல் மொழிகளையும் கலந்து பேசுகிறாள். தலைவன் இவற்றையெல்லாம் பூரணமாய் அனுபவிக்கிறான். அவளுடைய காதல் புன்னகையாக அரும்பிச் சொல்லாக மலர்ந்து கனிந்து குலுங்குகிறது. அங்கு தலைவன் கை அக்கனியைப் பறிக்க நீள்கிறது. அக்கனியை வழங்கத் தலைவி உடன்பட்டாலும் அவள் நாணம் தடுக்கிறது. கைக்கெட்டிய கனி வாய்க்கெட்டாமல் போகிறதேயெனத் தலைவன் நோகிறான். இந்நிலையில் தலைவனின் ஆற்றாமை, துயரம் கவிதையாக உருக்கொள்கின்றது. அக்கவிதையைக் காணுங்கள்!