பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 193

கவிதையைக் காணுங்களென்றா சொன்னேன். இல்லை இல்லை. அக்கன்னி போன்றதன்று நம் கவிதை! அதைச் சுவையுங்கள்!

நீண்டு வளர்ந்த நிமிர் சிகரத்தினை நீருண்ட மேகம் தழுவலையோ? நீலக்கடலில் புரண்டு வரும்திரை

நேராய் ஒவ்வொன்றினைக் கவ்வலையோ? ஒடும் சிறுநதி ஆழியுடன் கூடி

ஒன்றாய்க் கலந்து குலாவலையோ ஒலமிடும் வண்டு கோல மலர்களில்

ஒன்றியிருந்து தேன் உண்ணலையோ? இந்நிலம் தன்னிலே தன்னந்தனியாக

என்னைக் கலந்து நீ இன்பந்தராவிடில் யாது பொருள் இந்தக் காதலுக்கே? சிலர் உள்ளத்தில் சோகம் ஏறினால் உலகிற்கு லாபம் அதிகம். வான்மீகியின் சோகம் இராமாயணமாக உருவெடுத்தது.காந்தியடிகளின் சிறைவாசகம் சத்திய சோதனையாக மலர்ந்தது. திலகரின் சிறைத்தவம் கீதா ரகசியமாக மணந்தது. அதுபோல் தொண்டைமான் கேரள நாட்டில் டிப்டி கலெக்டராகப் பணியாற்றியதால் நமக்கு அருமையான கவிதை கிடைத்தது. அக்கவிதையை ரசிகர்கள் தனித்துப் படித்து இன்புற வேண்டும். இந்நாட்டிற்குச் சென்ற மந்தமாருதச் சருக்க நாயகன் அனுபவத்தைத் திருகூடராசப்பர் பாடுவார். நம் தொண்டைமான் தன் அனுபவத்தைச் சிருங்கார ரசம் ததும்பப் பாடுகிறார். -

“வெள்ளைக் கலையுடுத்தி விதிவழிச் செல்லுகின்ற கிள்ளை மொழிக் கன்னியரோ

கிறுகிறுக்க வைத்திடுவார்.” நம் தொண்டைமானவர்களின் கவிதைத் தொகுப்பு வண்ண மலர்ப் பூங்கா. பழமுதிர்ச்சோலை. சோலை நறுமலரினையோ கனியின் வண்ணம் வடிவு அளவு சுவைகளையோ நான் வர்ணித்துக் கொண்டிருந்து என்ன பயன்? தாங்களே அச்சோலையிலே புகுந்து கவிதை மலர்களை முகருங்கள்! செவிநுகர் கனிகளை உண்ணுங்கள்! சுவர்க்க போகத்தையே காண்பீர்கள்!