பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

கோவில்களை உருவாக்கிய அரசர்களும் கலைஞர்களும் தாங்கள் பெயர் பொறிக்க வேண்டுமென்றா கேட்டார்கள். ஆனால் இது நமக்கு நிச்சயமாக மனத்தில் நெருடுகிறது.

தொ.மு.பா. தோன்றிய பரம்பரையும், பழகிய நட்பும், சுற்றமும் இலக்கியத்திலேயே தோய்ந்தது. தந்தை தொண்டைமான் முத்தையா தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். சிறந்த ஓவியக் கலைஞன். புகைப்பட வல்லுநர். அவருடைய தந்தையார் சிதம்பரம் தொண்டைமான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் முறையாகத் தமிழ் பயின்று நெல்லைச் சிலேடை வெண்பா எழுதிய கவிஞர் தொ.மு.பாவின் சொந்தத் தம்பியாகிய தொ.மு.சி. ரகுநாதன் சிறந்த கவிஞர். பொதுவுடைமைவாதி. புதுமைப்பித்தனின் நெருங்கிய தோழர். தொ.மு.பா. ஆரம்பத்தில் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரிடமும், பின்பு குற்றால முனிவர் டி.கே.சிதம்பரநாத முதலியாரிடமும் இலக்கியத் தொடர்பு கொண்டு ராஜாஜி, கல்கி, ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப. சோமசுந்தரம் போன்ற இலக்கியச்சுவை மாந்திய நண்பர்களைப் பெற்றவர்.

திருநெல்வேலிச் சீமையின் தவப் புதல்வர்களில் தலையானவர்களில் ஒருவரான தொ.மு.பாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிச் சிறப்பிக்க வந்தவர்களும், ரசிக்க வந்தவர்களும் இலக்கியச் சாரலில் நனைந்து மகிழ்ந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

திருமதி நந்தினி ஆனந்தின் இனிமையான தேவார இசை தொடக்கத்திலேயே விழாவுக்குச் சிறப்பு சேர்த்தது. பின்னர் இறைவணக்கம் பாடிய பெண்மணி யார் தெரியுமா? கிரிக்கெட் வீரர் யூரீகாந்தின் தாயார். என்ன அருமையான குரல். வரவேற்புரை வழங்கிய சித்ரா, பாஸ்கரத் தொண்டைமானின் பேத்தி. திருமதி ராஜேஸ்வரி நடராஜனின் புதல்வி. விரையொன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? வரவேற்புரையே, டி.கே.சி, மஹராஜன் அடிக்கடி சொல்வதுபோல ‘கும்மாளி போட்டு வந்த இலக்கிய அறிமுகம்.

தலைவர் ஐராவதம் மகாதேவன் ஐ.ஏ.எஸ் சிந்துவெளி நாகரிகத்தின் மொழி ஆராய்ச்சியாளர் மட்டுமா? பேராசிரியர் அ. சீனிவாசராகவன் மூலமாக தொ.மு.பாவின் அறிமுகம் பெற்ற தான், பின்னவர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு நடத்திய கருத்தரங்கத்திலும் கலந்து கொண்டதாக அடக்கமாகச் சொன்ன இவர் தமிழர் கலை,