பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 197

இலக்கியம் பற்றித் தெரிவித்த தகவல்கள், ஆழ்ந்தெடுத்த முத்துக்கள்.

சிறப்புரை வழங்கிய டாக்குமெண்டரிப் படத் தயாரிப்பாளர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி மாணவப் பருவத்திலிருந்தே தொ.மு.பாவின் கலைக் கட்டுரைகளைப் படித்தவர். தற்போது ஆலயங்களைப் பற்றி ஒரு டாக்குமெண்டரி எடுக்க ஆயத்தப்படும் போது, இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு வந்தது ஒரு சுப சூசகம் என்று சொன்னார். -

புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சார்ந்த திருமதி ராணி ரமாதேவி தொண்டைமான் நல்ல தமிழிலே, சிறிதே பேசினாலும் உள்ளத்தைத் தொடும் அளவுக்கு, தொ.மு.பாவின் எழுத்து தன்னை எப்படிக் கவர்ந்தது என்று விளக்கினார். தொ.மு.பாவின் புதல்வி சரோஜினி தமக்கு சம்பந்தியாக அமைந்தது ஒரு பெறும்பேறு என்றும்

சொன்னார்.

பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் மேடை ஏறியதும் கலகலப்பு. புன்முறுவல் மாறாத முகத்தோடு அவர் வீசிய இலக்கியக் குறிப்புகள் ஏராளம். அன்று வெளியிடப்பட்ட புத்தகங்களில் ஒன்றில் தொ.மு.பா. எழுதியிருக்கும் நிகழ்ச்சி ஒன்றை நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.

தொ.மு.பாவும் நண்பரும், நண்பரின் வீட்டு வாசலில் காரில் அமர்ந்து நண்பரின் மனைவி வரக் காத்திருக்கிறார்கள். வேர்க்க விறுவிறுக்க அந்த அம்மையார் வந்ததும் நண்பர் “ஏன் தாமதம்? என்று கடிந்து சொல்ல, அவர் “இந்தக் குங்குமப் பொட்டுச் சரியாகவே இட்டுக் கொள்ளவரவில்லை. அதுதான் காரணம்” என்கிறார். தொ.மு.பா புன்சிரிப்போடு சொல்கிறார். “அம்மணி! நீங்கள் விரலை முக்குக்கு நேரே நீட்டி இட்டிருப்பீர்கள். அது தவறு. விரலைத் தலைக்கு மேலே கொண்டு வந்து நெற்றிக்குக் கீழே கொணர்ந்து இட்டால் அது ஒரே விநாடியில் சரியாகப் பொருந்திவிடும்.

நண்பரும் நண்பர் மனைவியும் ஆச்சரியத்தோடு பார்க்க, விளக்குகிறார். “எனக்கு எப்படித் தெரிந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? ரீரங்கம் கோவிலில் வேணுகோபாலன் சந்நிதியில், ஒரு பெண் சிற்பம் இவ்வாறு பொட்டு இட்டுக் கொண்டு நிற்கிறது. ஒருவேளை நீங்கள் வீரசைவராக இருந்து பெருமாள்கோவில் போகாதவரானால், தென்காசி விசுவநாதர் கோவிலுக்குப் போங்கள். அங்கேயும் இதேபோல ஒரு சிற்பம் இருக்கிறது” என்று சொன்னார். எவ்வளவு ஆழ்ந்த ஆராய்ச்சி பாருங்கள்.