பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 * சகோதரர் தொண்டைமான்

மீ. ப. சோமு.

தொண்டைமான் அவர்களுடன் பழகிய எல்லோருமே அவருடைய அன்பிலே மயங்குவார்கள். அவருடைய இலக்கியப் பேச்சிலே, அவருடைய கலை விளக்கங்களிலே, அவருடைய நகைச்சுவைகளிலே மயங்கிப் போவார்கள். அவருடைய முகத்திலே, வயது ஏறிவிட்ட பிறகும் கூட ஒரு பசலைப் பண்பு மிதக்கம். அத்தனை பெரிய சரீரத்திலே, ஒரு குழந்தை முகம் நின்று நண்பர்களோடு ஒரு குழந்தையின் ஆனந்தமும் குதி போட்டுக் கொண்டிருக்கும். தொண்டைமான் அவர்களின் வெற்றிகள் அனைத்துக்குமே காரணம் இந்தக் குழந்தைக் குதூகலம்தான்.

இத்தனை வயதிலும், எங்காவது ஒரு புதிய கோயில், ஒரு புதிய சிற்பம், எங்கோ ஒரு காட்டுக்குள்ளே பாருங்கள். உடனே கிளம்பிவிடுவார் அவர். ஒரு புதிய பாடல் ஒரு நூலிலே எங்கோ ஓர் ஒரத்தில் தென்பட்டால் போதும். தொண்டைமான் அவர்களின் இதயத்துக்குள்ளே இருக்கும் சிசு எழுந்து நடமாடும். நடனமே கூட ஆடும்.